நியூயார்க்கிலிருந்து கொஞ்சூண்டு நல்ல செய்தி!

உலகின் கொரோனா மையமாகிப் போய்விட்ட நியூயார்க் மாநிலத்திலிருந்து கொஞ்சமாக சில நல்ல செய்திகள் வந்துள்ளது. அமெரிக்காவில் தற்போதைய நிலவரப்படி 3 லட்சத்து 37 ஆயிரத்து 620 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நியூயார்க் மாநிலத்தில் மட்டுமே 1 லட்சத்து 23 ஆயிரம் பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக சோதனை முடிவுகளில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 615 ஆக உயர்ந்துள்ளது. இந்த வாரம் உயிரிழப்புகள் பெரும் எண்ணிக்கையில் இருக்கும் என்று அதிபர்
 

நியூயார்க்கிலிருந்து கொஞ்சூண்டு நல்ல செய்தி!லகின் கொரோனா மையமாகிப் போய்விட்ட நியூயார்க் மாநிலத்திலிருந்து கொஞ்சமாக சில நல்ல செய்திகள் வந்துள்ளது.

அமெரிக்காவில் தற்போதைய நிலவரப்படி 3 லட்சத்து 37 ஆயிரத்து 620 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.  நியூயார்க் மாநிலத்தில் மட்டுமே 1 லட்சத்து 23 ஆயிரம் பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக சோதனை முடிவுகளில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 615 ஆக உயர்ந்துள்ளது. இந்த வாரம் உயிரிழப்புகள் பெரும் எண்ணிக்கையில் இருக்கும் என்று அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். நியூயார்க் மாநிலத்தின் உயிரிழப்பு 4 ஆயிரத்து 159 ஆக தற்போது உள்ளது.

இந்நிலையில் நியூயார்க் மாநிலத் தலைநகர் அல்பனியிலிருந்து பேசியுள்ள கவர்னர் ஆண்ட்ரு குவாமோ, நியூயார்க் மாநிலத்தில் கொரோனாவினால் உயிரிழப்போர் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக சற்று குறைந்து வருவதாகக் கூறியுள்ளார். புதிதாக மருத்துவமனைக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக குறிப்பிடும் கவர்னர், இன்னும் சில நாட்கள் கழிந்த பின்னரே இந்த நிலை நீடிக்குமா என்பதை உறுதி செய்ய முடியும்.

இது உச்சநிலையா அல்லது சமதளத்தில் உள்ளதா அல்லது குறையத் தொடங்கியுள்ளதா என்பதை இன்னும் தெளிவாக உணரமுடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார் கவர்னர் ஆண்ட்ரு குவாமோ.

ஒவ்வொரு நகரம், மாநிலம், நாட்டிலும் கொரோனா தொற்று உச்சத்தை எட்டிய பிறகு, படிப்படியாக குறையத் தொடங்குவதை தெரிந்து கொள்ள முடிகிறது. அமெரிக்காவில் டெக்சாஸ் உள்ளிட்ட சில மாநிலங்களில் மே மாதம் வரையிலும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்காக மருத்துவமனைக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை, மாநில வாரியாக அதிகரிக்கும் என்று beckershospitalreview மருத்துவச் செய்தித்தளம் கணித்துள்ளது. 

இந்தியாவில் சமூகப் பரவல் இல்லை என்று கூறப்பட்டு வரும் நிலையில் அடுத்த இரண்டு மாதங்கள் மிகவும் கடினமாக இருக்கும் என்றே பொதுவான கருத்து உள்ளது. அரசு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைத்து  “விலகியிருத்தல், வீட்டிலிருத்தல்” இரண்டையும் கண்ணும் கருத்துமாக கடைபிடிப்பது இந்த கொள்ளை நோயிலிருந்து காப்பாற்றிக் கொள்ள உதவும்.

A1TamilNews.com

From around the web