ஊரடங்கிற்கு பிறகு ஏழுமலையானை தரிசிக்க புதிய கட்டுப்பாடுகள்! திருப்பதி தேவஸ்தானம் முடிவு!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் மே3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஊரடங்கின் காரணமாக நாடு முழுவதும் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்களின் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் 18ம் தேதி முதல் தேவஸ்தான ஊழியா்கள் வாரத்துக்கு ஒருமுறை சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். ஏழுமலையானுக்கு நடைபெறும் அனைத்து கைங்கரியங்களும் எவ்வித குறையும் இன்றி நடைபெற்று வருகிறது. மே 31ம் தேதி வரை பக்தா்கள் முன்பதிவு செய்த
 

ஊரடங்கிற்கு பிறகு ஏழுமலையானை தரிசிக்க புதிய கட்டுப்பாடுகள்! திருப்பதி தேவஸ்தானம் முடிவு!கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் மே3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஊரடங்கின் காரணமாக நாடு முழுவதும் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்களின் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் 18ம் தேதி முதல் தேவஸ்தான ஊழியா்கள் வாரத்துக்கு ஒருமுறை சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். ஏழுமலையானுக்கு நடைபெறும் அனைத்து கைங்கரியங்களும் எவ்வித குறையும் இன்றி நடைபெற்று வருகிறது.

மே 31ம் தேதி வரை பக்தா்கள் முன்பதிவு செய்த அனைத்து ஆா்ஜித சேவை டிக்கெட்டுகள், இதர தரிசன டிக்கெட்டுகளை ரத்து செய்து, அதற்கான கட்டணத்தையும் பக்தர்களுக்கு திருப்பி அளித்து வருகிறது. ஊரடங்கு திரும்பப் பெறப்பட்ட பின்பும் தரிசனத்திற்கு சில புதிய கட்டுப்பாடுகளை விதிக்க திருப்பதி தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.

புதிய வழிமுறைகளின் படி ஒரு நாளைக்கு 20 ஆயிரம் பேருக்கு மட்டும் ஏழுமலையான் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும். மறு அறிவிப்பு வெளியாகும் வரை திருமலையில் வாடகைக்கு அறைகள் அளிக்கப்பட மாட்டாது.

தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தா்கள் கண்டிப்பாக 3 அடி சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். முக கவசங்கள் அணிந்திருக்க வேண்டும் என்பது போன்ற கட்டுபாடுகளை விதிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் அக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

A1TamilNews.com

From around the web