சிறுவனை செருப்பு கழற்ற வைத்த திண்டுக்கல் சீனிவாசன்.. பழங்குடி நல ஆணையம் நோட்டீஸ்

முதுமலை யானைகள் புத்துணர்வு முகாமுக்கு பார்வையிடச் சென்ற வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அங்கு வந்திருந்த பழங்குடி சிறுவனை அழைத்து தன்னுடைய கால் செருப்பை கழற்றச் செய்தார். பின்னர், தன்னுடைய பேரனாக அவனைக் கருதி அப்படிச் சொன்னதாகவும் எந்த உள்நோக்கமும் இல்லை என்று அமைச்சர் விளக்கம் அளித்தார். ஆனால் பழங்குடி சிறுவனை செருப்பு கழற்ற வைத்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு அரசியல் தலைவர்கள் உள்பட அனைத்து தரப்புகளிலிருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி திண்டுக்கல் சீனிவாசன்
 

சிறுவனை செருப்பு கழற்ற வைத்த திண்டுக்கல் சீனிவாசன்.. பழங்குடி நல ஆணையம் நோட்டீஸ்முதுமலை யானைகள் புத்துணர்வு முகாமுக்கு பார்வையிடச் சென்ற வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அங்கு வந்திருந்த பழங்குடி சிறுவனை அழைத்து தன்னுடைய கால் செருப்பை கழற்றச் செய்தார்.

பின்னர், தன்னுடைய பேரனாக அவனைக் கருதி அப்படிச் சொன்னதாகவும் எந்த உள்நோக்கமும் இல்லை என்று அமைச்சர் விளக்கம் அளித்தார். ஆனால் பழங்குடி சிறுவனை செருப்பு கழற்ற வைத்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு  அரசியல் தலைவர்கள் உள்பட அனைத்து தரப்புகளிலிருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 

அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி திண்டுக்கல் சீனிவாசன் மீது வன்கொடுமைச் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தேசிய பழங்குடியின நல வாரியம் தலைமைச் செயலாளர், தமிழக டிஜிபி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அமைச்சர் திண்டுகல் சீனிவாசன் பழங்குடி சிறுவனை அழைத்து காலணியை கழற்றச் சொன்ன விவகாரத்தில், இது வரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று கேட்டு இந்த நோட்டீஸில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. 15 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

https://www.A1TamilNews.com

From around the web