‘இதுக்கு மேலயும் அசிங்கப்படப் போறீங்களா… கிளம்புங்க கிரண் பேடி’ – முதல்வர் நாராயணசாமி!

புதுச்சேரி: கடந்த மூன்று ஆண்டுகளாக புதுச்சேரியின் வளர்ச்சிக்கு தடையாக இருந்து வரும் துணை ஆளுநர் புதுச்சேரியை விட்டு கிளம்ப வேண்டிய நேரம் வந்து விட்டது என்று புதுவை முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். புதுச்சேரி எம்.எல்.ஏ லஷ்மி நாராயணன் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், அன்றாட அரசு நடவடிக்கைகளில் துணை ஆளுநர் தலையிடக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. துணை ஆளுநருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கிய மத்திய அரசு ஆணையையும் ரத்து செய்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார் கிரண்பேடி.
 

புதுச்சேரி: கடந்த மூன்று ஆண்டுகளாக புதுச்சேரியின் வளர்ச்சிக்கு தடையாக இருந்து வரும் துணை ஆளுநர் புதுச்சேரியை விட்டு கிளம்ப வேண்டிய நேரம் வந்து விட்டது என்று புதுவை முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரி எம்.எல்.ஏ லஷ்மி நாராயணன் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், அன்றாட அரசு நடவடிக்கைகளில் துணை ஆளுநர் தலையிடக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. துணை ஆளுநருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கிய மத்திய அரசு ஆணையையும் ரத்து செய்தது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார் கிரண்பேடி. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதைக் கொண்டாடும் வகையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகிறார்கள். முதல்வர் நாராயணசாமியும் இனிப்பு வழங்கினார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த 3 ஆண்டுகளாக புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார் துணை ஆளுநர் கிரண் பேடி. உச்சநீதிமன்றம் தீர்ப்பு மூலம் இறுதி முடிவு வந்துள்ளது. துணை ஆளுநர் புதுச்சேரியை விட்டு கிளம்புவதற்கு  இது தான் சரியான நேரமாகும்,” என்று கூறியுள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவு இன்னும் கிடைக்கவில்லை. புதுச்சேரி மக்களின் நலனே தன்னுடைய தலையாய கடமை என்று கிரண்பேடி ட்வீட் செய்துள்ளார்.

– வணக்கம் இந்தியா 

 
 

From around the web