‘நான் கண்ட கலைஞர்’ – கார்த்திகேய சிவசேனாபதியின் புதிய தொடர் – ஒர் அறிமுகம்

‘நான் கண்ட கலைஞர்’ – கார்த்திகேய சிவசேனாபதி : அறிமுகம் தமிழ்நாட்டின் இரண்டு பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றானதும், அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் தாய்க் கழகமும் ஆன திராவிட முன்னேற்ற கழகம் 70 வது ஆண்டை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. 70 ஆண்டு கால வரலாற்றில் 20 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆண்டது திமுக. முதல் இரண்டு ஆண்டுகள் அறிஞர் அண்ணாவும் மீதி 18 ஆண்டுகள் கலைஞர் கருணாநிதியும் திமுக சார்பில் முதல்வராக ஆட்சி செய்தார்கள். பெண்களுக்கு சொத்துரிமை,
 

‘நான் கண்ட கலைஞர்’ – கார்த்திகேய சிவசேனாபதி : அறிமுகம்

மிழ்நாட்டின் இரண்டு பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றானதும், அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் தாய்க் கழகமும் ஆன திராவிட முன்னேற்ற கழகம் 70 வது ஆண்டை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது.

70 ஆண்டு கால வரலாற்றில் 20 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆண்டது திமுக. முதல் இரண்டு ஆண்டுகள் அறிஞர் அண்ணாவும் மீதி 18 ஆண்டுகள் கலைஞர் கருணாநிதியும் திமுக சார்பில் முதல்வராக ஆட்சி செய்தார்கள். பெண்களுக்கு சொத்துரிமை, சுயமரியாதை திருமணத்திற்கு அங்கீகாரம், கல்லூரி வரையிலும் இலவசக் கல்வி, சமத்துவபுரம் என பெரியாரின் பல்வேறு சமூக நீதி கொள்கைகளுக்கு முதலில் திமுக ஆட்சியிலும் அதைத் தொடர்ந்து வந்த அதிமுக ஆட்சியிலும் சட்டவடிவம் கிடைத்துள்ளது.

இவைகளில் பெரும்பான்மையான திட்டங்களுக்கு சொந்தக்காரர் கலைஞர் கருணாநிதி. தவிர, திமுகவின் தலைவராகவும், அதுவும் முதல் தலைவராக, 50 ஆண்டுகள் இருந்தவரும் கலைஞர் கருணாநிதி தான். “தந்தை பெரியார் தான் எங்கள் தலைவர்” என்று அவரது வாழ்நாள் முழுவதும் திமுகவுக்கு தலைவர் பதவி கிடையாது.

கருணாநிதியின் ஆட்சியின் சாதனைகள் எவ்வளவு கூறப்படுகிறதோ, அதே போல் குற்றச்சாட்டுகளும் சொல்லப்படுகிறது. ஆனாலும், கட்சி வரலாற்றில் மூன்றில் ஓரு பங்குக்கும் குறைவான காலமே ஆட்சியில் இருந்த போதும், இன்றும் வலிமையான கட்சியாக இருக்கிறது என்றால் அதற்கான காரணம் முழுக்கவும் கலைஞர் கருணாநிதியையேச் சாரும்.

‘நான் கண்ட கலைஞர்’ – கார்த்திகேய சிவசேனாபதியின் புதிய தொடர் – ஒர் அறிமுகம்

அவருடைய18 ஆண்டு கால ஆட்சியில் கட்டமைப்பு, விவசாயம், தொழில் துறை, கணிணித் துறை உள்ளிட்ட, தமிழகம் அடைந்துள்ள வளர்ச்சிகளை எளிதாக கடந்து செல்லவும் முடியாது. கலைஞர் கருணாநிதியின் அரசியல் ஆட்சி வரலாற்றை, ‘நான் கண்ட கலைஞர் ’ தொடர் மூலம் வணக்கம் இந்தியா வாசகர்களிடம் வாரந்தோறும் வழங்க உள்ளார் கார்த்திகேய சிவசேனாபதி.

வரலாற்று சிறப்பு மிக்க ஜல்லிக்கட்டுப் போராட்டம் மூலம் உலக அளவில் அறியப்பட்ட போதிலும், இயற்கை விவசாயி, சுற்றுச்சூழல் ஆர்வலர், சமூகநீதிப் போராளிஎன பன்முகம் கொண்டவர் கார்த்திகேய சிவசேனாபதி. காங்கேயம் பகுதியில் பாரம்பரியமிக்க குடும்பத்தைச் சார்ந்தவர். அவரது தாத்தா காலம் தொட்டே தமிழக அரசியலிலும் சமூக பங்களிப்புகளிலும் தீவிர ஈடுபாடு கொண்டவர்கள் கார்த்திகேய சேனாபதியின் குடும்பத்தினர்கள்.

‘நான் கண்ட கலைஞர்’ – கார்த்திகேய சிவசேனாபதியின் புதிய தொடர் – ஒர் அறிமுகம்

தந்தை பெரியாரின் பிறந்த நாளில் அவருடைய முக்கிய சீடர்களின் ஒருவரான கலைஞர் கருணாநிதி தொடர் பற்றிய அறிவிப்பு தற்செயலாக நிகழ்ந்ததே ஆகும்.

பெரியாரின் சமூகநீதிக் கொள்கைகளையும் , சங்கத் தமிழர் காலம் தொட்ட பாரம்பரியத்தையும் இரு கண்களாகக் கருதி செயல்பட்டு வரும் கார்த்திகேய சிவசேனாபதியின் ‘நான் கண்ட கலைஞர்’ தொடர் வாரம் தோறும் உங்கள் வணக்கம் இந்தியாவில் வெளிவரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

– முதன்மை ஆசிரியர்

வணக்கம் இந்தியா

From around the web