20 லிட்டர் தாய்ப்பால்! நெகிழ வைத்த அம்மா!

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த வெர்ஜினியாவில் வசிப்பவர் கினா மிச்செல். இரண்டு குழந்தைகளுக்கு தாயான இவருக்கு வயது 36. முதல் குழந்தைக்கு 3 வயதாகும் நிலையில் இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுத்தார் மிச்சேல். முதல் குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே, தாய்ப்பால் தானம் அளிக்கத் தொடங்கினார் கினா மிச்சேல். வேலைக்குச் செல்கிற தாய்மார்களுக்கு உதவும் வகையில் தான் தாய்ப்பால் தானம் செய்வதை முக்கிய பணியாக கினா பின்பற்றி வருகிறார். சென்ற 2 ஆண்டுகளாக, ஏறக்குறைய 20 லிட்டர் தாய்ப்பால்
 

 

20 லிட்டர் தாய்ப்பால்! நெகிழ வைத்த அம்மா!

மெரிக்க நாட்டைச் சேர்ந்த வெர்ஜினியாவில் வசிப்பவர் கினா மிச்செல். இரண்டு குழந்தைகளுக்கு தாயான இவருக்கு வயது 36. முதல் குழந்தைக்கு 3 வயதாகும் நிலையில் இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுத்தார் மிச்சேல்.

முதல் குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே, தாய்ப்பால் தானம் அளிக்கத் தொடங்கினார் கினா மிச்சேல். வேலைக்குச் செல்கிற தாய்மார்களுக்கு உதவும் வகையில் தான் தாய்ப்பால் தானம் செய்வதை முக்கிய பணியாக கினா பின்பற்றி வருகிறார். சென்ற 2 ஆண்டுகளாக, ஏறக்குறைய 20 லிட்டர் தாய்ப்பால் தானம் அளித்துள்ளார்.

”எனது தாய், மற்றவர்களுக்கு உதவும் வகையில் தாய்ப்பால் தானம் செய்வது வழக்கம். அதுபற்றி என்னிடம் அடிக்கடி பெருமையாகக் கூறுவார். மேலும், என்னையும் அப்படி செய்ய சொல்லி வலியுறுத்துவார். பலருக்கு, தாய்ப்பால்சரியாக சுரப்பதில்லை. அனைத்து தாய்மார்களும் தாய்ப்பால் தானம் செய்வதன் மூலம் இதனை சரி செய்ய முடியும். தாய்ப்பால் தானம் என்பது மிக முக்கியமான விஷயமாகும். ஒரு குழந்தை பிறந்த உடனேயே, நானும் தாய்ப்பால் தானம் செய்ய தீர்மானித்தேன்” என்று கினா மிச்செல் கூறுகிறார்.

ஒவ்வொரு ஆண்டும் என் வீட்டில் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள் குவியத் தொடங்கும். அது தான் எனக்கான பாராட்டு” என்று நெகிழ்ச்சியுடன் மிச்சேல் கூறியுள்ளார்.

https://www.A1TamilNews.com

From around the web