அமெரிக்காவில் படிப்பவர்களுக்கு ஹெச்1பி விசா கிடைக்க கூடுதல் வாய்ப்பு.. இந்திய ஐடி கம்பெனிகளுக்கு ஆப்பு வைக்கிறாரா ட்ரம்ப்?

வாஷிங்டன்: “மேக் அமெரிக்கா க்ரேட் அகெய்ன்” என்ற முழக்கத்துடன்அமெரிக்க நிறுவனங்கள் உள்நாட்டு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க அதிபர் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்து வந்தார். அப்படி மீண்டும் அமெரிக்காவுக்குள் வந்த புதிய வேலைவாய்ப்புகள் பெரும்பாலும் ப்ளூ காலர் ஜாப் எனப்படும் தொழிலாளர் மட்டத்திலானவை. அதிக சம்பளம் வழங்கும் டெக்னாலஜி வேலைகளை அமெரிக்கர்களுக்கு திருப்புவது ட்ரம்பின் அடுத்த திட்டம். ஹெச்1பி விசாக்கள் மூலம் டெக்னாலஜி வேலைகள், குறிப்பாக இந்திய ஐடி நிறுவனங்களுக்கு சென்று வருவதை அறிந்த ட்ரம்ப், ஹெச்1பி விசா
 
 
வாஷிங்டன்:  “மேக் அமெரிக்கா க்ரேட் அகெய்ன்”  என்ற முழக்கத்துடன்அமெரிக்க நிறுவனங்கள் உள்நாட்டு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க அதிபர் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்து வந்தார். அப்படி மீண்டும் அமெரிக்காவுக்குள் வந்த புதிய வேலைவாய்ப்புகள் பெரும்பாலும் ப்ளூ காலர் ஜாப் எனப்படும் தொழிலாளர் மட்டத்திலானவை.
 
அதிக சம்பளம் வழங்கும் டெக்னாலஜி வேலைகளை அமெரிக்கர்களுக்கு திருப்புவது ட்ரம்பின் அடுத்த திட்டம். ஹெச்1பி விசாக்கள் மூலம் டெக்னாலஜி வேலைகள், குறிப்பாக இந்திய ஐடி நிறுவனங்களுக்கு சென்று வருவதை அறிந்த ட்ரம்ப், ஹெச்1பி விசா திட்டத்தையே நிறுத்த விரும்பினார். ஆனால் அது பாராளுமன்ற ஒப்புதல் இல்லாமல், அவ்வளவு எளிதாக நடக்கக் கூடியது அல்ல. டெக்னாலஜி நிறுவனங்களும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும்.
 
ஹெச்1பி விசா நீட்டிப்பு, புதிய விண்ணப்பம் போன்றவைகளுக்கு, ஏற்கனவே அமலில் இருக்கும் சட்ட விதிமுறைகளின் படி, கூடுதல் கண்காணிப்புக்கு உத்தரவிட்டார்.  இந்திய ஐடி ஊழியர்கள் பலருக்கு விசா நீட்டிப்பு கிடைக்காமல் இந்தியா திரும்ப வேண்டிய நிலையும் ஏற்பட்டது. 
 
தற்போது புதிதாக ஒரு விதிமுறையை அமல்படுத்த உள்ளார். அதன்படி, அமலில் இருக்கும், ஆண்டு வரம்பான 65 ஆயிரம் ஹெச்1பிக்கள், விண்ணப்பித்த அனைவருக்கும் லாட்டரி மூலம் பகிர்ந்தளிக்கப் படும். இதில் அமெரிக்காவில் முதுகலைப்படிப்பு படித்தவர்களும் அடங்குவர். லாட்டரி மூலம் தேர்ந்தெடுக்கப் படாதவர்களில் அமெரிக்காவில் முதுகலைப் படிப்பு படித்தவர்களின் விண்ணப்பங்களை கூடுதல் 20 ஆயிரம் விசா வரம்புக்குள் லாட்டரி மூலம் தேர்ந்தெடுப்பார்கள்.
 
இதன் மூலம் அமெரிக்காவில் படித்தவர்களுக்கு ஆண்டுக்கு 5 ஆயிரம் கூடுதல் ஹெச்1பி விசாக்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இது இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஹெச்1பி விசாவில் அனுப்பும் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு  பின்னடைவாகும்.
 
மேலும் ஹெச்1பி விண்ணப்பங்களுக்கு முதலில் பதிவு செய்யும் புதிய நடைமுறையையும் அமல்படுத்த உள்ளார்கள். முன்பதிவுகள் அடிப்படையில் லாட்டரி குலுக்கல் புதிய விதிகளின் படி நடைபெறும். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பின்னர் முழு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
 
இந்த விதிமுறைகள் மாற்றம் பொதுமக்கள் கருத்துகளுக்காக வெளியிடப்பட்டுள்ளது. லாட்டரி முறையில் மாற்றம் வரும் ஏப்ரலிலும், முன்பதிவு முறை அதற்கடுத்த ஆண்டிலும் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.
 
புதிய விதிமுறைகள், அமெரிக்காவுக்குச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் என்றும் கருதப் படுகிறது.
 

From around the web