மோடியின் லடாக் வருகை இந்தியா சீனா எல்லைப் பிரச்சனையை மேலும் சிக்கலாக்கி உள்ளது! சீன வெளியுறவுத் துறை அமைச்சகம்!

இந்திய சீனா எல்லைப்பகுதியில் ஏற்படும் பதட்டத்தை தணிக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்திய பிரதமர் மோடி நேற்று திடீரென லடாக் பயணம் மேற்கொண்டார். அங்கு உரை நிகழ்த்திய மோடி ‘எல்லை ஆக்கிரமிப்பு சகாப்தம் முடிந்தது. இந்தியாவில் இனி வளர்ச்சிக்கான நேரம்’ என வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பேசியிருந்தார். இது குறித்து சீனா பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ‘சீனாவின் உறவு நிலையை இந்தியா தவறாக கணித்து விட்டது என்றும் மோடி அவர்களின் எல்லை விரிவாக்கம் குறித்த
 

மோடியின் லடாக் வருகை இந்தியா சீனா எல்லைப் பிரச்சனையை மேலும் சிக்கலாக்கி உள்ளது!  சீன வெளியுறவுத் துறை அமைச்சகம்!ந்திய சீனா எல்லைப்பகுதியில் ஏற்படும் பதட்டத்தை தணிக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்திய பிரதமர் மோடி நேற்று திடீரென லடாக் பயணம் மேற்கொண்டார்.

அங்கு உரை நிகழ்த்திய மோடி ‘எல்லை ஆக்கிரமிப்பு சகாப்தம் முடிந்தது. இந்தியாவில் இனி வளர்ச்சிக்கான நேரம்’ என வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பேசியிருந்தார். இது குறித்து சீனா பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் ‘சீனாவின் உறவு நிலையை இந்தியா தவறாக கணித்து விட்டது என்றும் மோடி அவர்களின் எல்லை விரிவாக்கம் குறித்த கருத்து மிகைப்படுத்தி கூறப்பட்டுள்ளது’. சீனா எல்லைகளில் அமைந்திருக்கும் மற்ற நாடுகளில் அமைதியான சூழலே உள்ளது.

இதனால் சீனா எல்லை ஆக்கிரமிப்பு செய்கிறது எனக் கூறுவது தவறு என தெரிவித்துள்ளது. மோடியின் இந்த லடாக் வருகையால் இந்தியா எல்லை பிரச்சனை மேலும் சிக்கலாகி உள்ளது.

இரு நாடுகளுக்கும் தேசத்தின் வளர்ச்சி போன்ற இன்றியமையாத கடமைகள் இருப்பதால் இந்த எல்லை பிரச்சனையை சிக்கலாக்குவது தவறு. இது இரு நாடுகளின் வளர்ச்சிக்கும் கேடு விளைவிக்கும்.

இத்துடன் சீனச் செயலிகளைத் தடை செய்வதால் இரு நாடுகளின் பொருளாதாரமுமே பாதிக்கப்படும். இது இந்திய-சீனா நட்பை பாதிக்கிறது. இதற்கு எதிராக உலக வர்த்தக விதிகளை மீறுவது இந்தியாவிற்கு பாதிப்பையே ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

A1TamilNews.com

From around the web