காஷ்மீர் விவகாரம்.. பாகிஸ்தான், சீனாவை அலற வைக்கும் மோடி வியூகம்!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் இந்திய நாட்டின் ஒரு அங்கம் என்றாலும், அந்த மாநிலத்தின் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. அது கூட பெயரளவுக்குத்தான். இந்திய நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்கள் காஷ்மீரில் செல்லாது, காஷ்மீருக்கு தனிக் கொடி என கிட்டத்தட்ட தனி நாடு மாதிரிதான் இந்த ஜம்மு காஷ்மீர் இருந்து வந்தது. இதனை ஆரம்பத்திலிருந்தே கடுமையாக எதிர்த்து வந்த பாஜக, ‘ஜம்மு காஷ்மீருக்கு தரப்படும் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வோம். காஷ்மீரை இந்தியாவின் மற்ற
 

ம்மு காஷ்மீர் மாநிலம் இந்திய நாட்டின் ஒரு அங்கம் என்றாலும், அந்த மாநிலத்தின் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. அது கூட பெயரளவுக்குத்தான். இந்திய நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்கள் காஷ்மீரில் செல்லாது, காஷ்மீருக்கு தனிக் கொடி என கிட்டத்தட்ட தனி நாடு மாதிரிதான் இந்த ஜம்மு காஷ்மீர் இருந்து வந்தது.

இதனை ஆரம்பத்திலிருந்தே கடுமையாக எதிர்த்து வந்த பாஜக, ‘ஜம்மு காஷ்மீருக்கு தரப்படும் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வோம். காஷ்மீரை இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போல மாற்றுவோம்’ என்று வாக்குறுதி கொடுத்துதான் தேர்தலைச் சந்தித்தது. முதல் முறை பதவி ஏற்ற போதே இதனைச் செய்யத் திட்டமிட்டது மோடி அரசு. ஆனால் சில தயக்கங்களால் அப்போது முடியவில்லை. இரண்டாம் முறை மிகப் பெரிய மெஜாரிட்டியுடன் பிரதமரான மோடி, பதவி ஏற்ற கையோடு ஜம்மு காஷ்மீரை முழுமையாக இந்தியாவுடன் இணைத்துவிட்டார். சர்வதேச அரங்கில் இதனைப் பெரிய பிரச்சினையாக்க வேண்டும் என பாகிஸ்தான் எவ்வளவோ முட்டி மோதிப் பார்த்தது. துணைக்கு சீனாவையும் அழைத்துக் கொண்டது. ஆனால் எடுபடவில்லை. அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் ‘ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினை. அதில் நாங்கள் தலையிட முடியாது’ என்று சொல்லி ஒதுங்கிக் கொண்டன. சீனாவும் ரொம்ப துள்ளாமல் அடக்கி வாசிக்கிறது.

தன் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு காஷ்மீரை முழுமையாக இணைத்த மோடி – அமித் ஷா கூட்டணி, அடுத்து குறி வைத்திருப்பது பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதி மற்றும் சீனா வசமுள்ள காஷ்மீர் பகுதிகளை. பாகிஸ்தான் வசமுள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) இரண்டு பகுதிகளாக உள்ளது. ஒன்று ஆசாத் காஷ்மீர், மற்றொன்று வடக்குப் பகுதி எனப்படும் கில்ஜிட் – பால்டிஸ்தான். காஷ்மீரின் 30 சதவீத நிலப்பரப்பு இந்த இரு பகுதிகளும்.

அடுத்தது சீனா பிடியில் உள்ள அக்சய் சின். இந்தப் பகுதியை 1962-ம் ஆண்டு இந்திய – சீனப் போரின்போது ஆக்கிரமித்தது சீனா. காஷ்மீரின் 15 சதவீத நிலப்பரப்பு இந்த அக்சய் சின். பெரும்பாலும் மக்கள் வசிக்காத நிலப்பரப்பு இது. இது தவிர 7000 சதுர கிமீ பரப்புள்ள ஷாக்ஸ்கம் பள்ளத்தாக்கு எனும் பகுதியை சீனாவுக்கு தாரை வார்த்தது பாகிஸ்தான்.

இந்த பகுதிகள் முழுவதும் சேர்ந்ததுதான் ஒன்றுபட்ட காஷ்மீர். அதை கிரேட்டர் காஷ்மீர் என்பார்கள். பாகிஸ்தான் மற்றும் சீனாவின் வசமுள்ள ஆக்கிரமிப்புப் பகுதிகள் முழுவதையும் மீட்டு கிரேட்டர் காஷ்மீரை உருவாக்க வேண்டும் என்று பேச ஆரம்பித்துள்ளது மோடி அரசு.

பாகிஸ்தான், சீனா வசமுள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரை உயிரைக் கொடுத்தாவது மீட்பேன் என நாடாளுமன்றத்திலேயே முழங்கினார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. இப்போது பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அதையே வேறு வார்த்தைகளில் பேசியுள்ளார். இனி காஷ்மீர் பற்றி பேசுவதாக இருந்தால், ஆக்கிரமிப்பு பகுதிகளை திரும்பவும் இந்தியாவிடம் ஒப்படைப்பது பற்றித்தான் பேச முடியும் என்று ஆணித்தரமாக சொல்லிவிட்டார். இது பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல, சீனாவுக்கும் பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது.

காஷ்மீர் விவகாரம்.. பாகிஸ்தான், சீனாவை அலற வைக்கும் மோடி வியூகம்!

சர்வதேச அரங்கில் இதுவரை காஷ்மீர் பிரச்சினை என்றால், இப்போது இந்தியா வசமுள்ள ஜம்மு காஷ்மீர் பற்றியதாகத்தான் இருக்கும். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி பேசவே மாட்டார்கள். ஆனால் இனி காஷ்மீர் பற்றி பேச்சு எழுந்தாலே அது பாகிஸ்தான், சீனா ஆக்கிரமிப்பிலுள்ள காஷ்மீர் பற்றியதாகவும் இருக்கும்படி பார்த்துக் கொண்டிருக்கிறது மோடி அரசு. குறிப்பாக சீனாவுக்கு இது மிகப்பெரிய எரிச்சலைக் கிளப்பியுள்ளது. பாகிஸ்தானால் வேறு எங்கும் ஜம்மு காஷ்மீர் பற்றி புலம்பக்கூட முடியாத நிலை. அந்த வகையில், ஜம்மு காஷ்மீர் விஷயத்தில் இதுவரை எந்த அரசும் செய்யாத சாதனையை மோடி அரசு செய்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு உத்தரவாதம் தந்து, நாடாளுமன்றத்தில் அறிவித்தபடி, அந்த மக்களின் வாழ்க்கைத் தரமும் வேலை வாய்ப்பு நிலையும் உயர்த்தப்பட்டால் ஜம்மு காஷ்மீரும் மனசார இந்தியாவுடனே இருக்கும்.

– வணக்கம் இந்தியா ஸ்பெஷல்

From around the web