தேசியக் கல்விக் கொள்கையை திரும்பப் பெறுக – மு.க.ஸ்டாலின்!

சென்னை: வரைவு தேசியக் கல்விக்கொள்கையை திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “திமுகவின் சார்பில் வரைவு தேசியக் கல்விக் கொள்கையை கடுமையாக எதிர்க்கிறேன்.இந்தி திணிப்பு உள்ளிட்டவற்றிக்கு ஆதரவான #NEP2019 ஏழைகளுக்கு எதிரானது, கூட்டாட்சிக்கு முரணானது, அரசியல் சட்டம் வழங்கும் உரிமைகளுக்கு எதிரானது. எனவே, #NEP2019-ஐ திரும்பப் பெற வலியுறுத்துகிறேன்,” என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அத்துடன் ஒரு வரைவு தேசியக்
 

தேசியக் கல்விக் கொள்கையை திரும்பப் பெறுக – மு.க.ஸ்டாலின்!சென்னை: வரைவு தேசியக் கல்விக்கொள்கையை திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

“திமுகவின் சார்பில் வரைவு தேசியக் கல்விக் கொள்கையை கடுமையாக எதிர்க்கிறேன்.இந்தி திணிப்பு உள்ளிட்டவற்றிக்கு ஆதரவான #NEP2019 ஏழைகளுக்கு எதிரானது, கூட்டாட்சிக்கு முரணானது, அரசியல் சட்டம் வழங்கும் உரிமைகளுக்கு எதிரானது. எனவே, #NEP2019-ஐ திரும்பப் பெற வலியுறுத்துகிறேன்,” என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

அத்துடன்  ஒரு வரைவு தேசியக் கல்விக் கொள்கை தொடர்பாக திமுக சார்பில் ஒரு நீண்ட ஆய்வறிக்கையை ஆங்கிலத்தில் https://dmk.in/nep என்ற இணைப்பு மூலமும் தமிழில் https://dmk.in/nep-tamil என்ற இணைப்பு மூலமும் மத்திய அரசுக்கும், பிரதமர் அலுவலகத்திற்கும் அணுப்பியுள்ளார் 

– வணக்கம் இந்தியா

From around the web