உதயநிதிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி !

கடந்த வாரத்தில் சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பொருட்டும், முன்னாள் தலைவர்களை கவுரவிக்கும் பொருட்டும் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டன. சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம், ஆலந்தூர், கோயம்பேடு புறநகர் மெட்ரோ நிலையங்களுக்கு எம்ஜிஆர், அறிஞர் அண்ணா, ஜெயலலிதா ஆகியோர்களின் பெயர்கள் சூட்டப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. பல்வேறு தளங்களிலிருந்து அரசின் இந்த நடவடிக்கைக்கு பாராட்டுகள் குவிந்த நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி இதை விமர்சித்து டுவீட்
 

உதயநிதிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி !கடந்த வாரத்தில் சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பொருட்டும், முன்னாள் தலைவர்களை கவுரவிக்கும் பொருட்டும் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டன. சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம், ஆலந்தூர், கோயம்பேடு புறநகர் மெட்ரோ நிலையங்களுக்கு எம்ஜிஆர், அறிஞர் அண்ணா, ஜெயலலிதா ஆகியோர்களின்  பெயர்கள் சூட்டப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

பல்வேறு தளங்களிலிருந்து அரசின் இந்த நடவடிக்கைக்கு  பாராட்டுகள் குவிந்த நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி இதை விமர்சித்து டுவீட் போட்டு இருந்தார். அதில் ஜெயலலிதாவின் பெயர் சூட்டப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இதற்கு பதிலடி  கொடுக்கும் விதமாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி சர்க்காரியா கமிஷனால் விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்தவர்கள் என குற்றம் சாட்டப்பட்டவர்கள். திருட்டு ரயில் ஏறி சென்னை வந்தவர்கள். சட்டத்தையும், சமூகத்தையும் ஏமாற்றி செல்வ செழிப்பானவர்கள். எனவே இதை குறை கூறும் தகுதி உதயநிதிக்கு கிடையாது.

தமிழர்களின் வளர்ச்சிக்காகவும், தமிழகத்தின் நன்மைக்காகவும் தன் வாழ்க்கையை தியாகம் செய்து தமிழ் மக்களின் உரிமைக்காகவும் உரிமைக்குரல் கொடுத்த அம்மா ஜெயலலிதாவின் பெயரை மெட்ரோ ரயில் நிலையத்துக்கு சூட்டியது, தமிழக மக்களின் தீராக ஏக்கத்தை வெளிப்படுத்தியது என விளக்கம் அளித்துள்ளார்.

A1TamilNews.com

From around the web