ஹூஸ்டனில் மோடி – ட்ரம்ப் சந்திப்பு உலகத்திற்கு சொல்லும் முக்கிய செய்தி – அமைச்சர் ஜெய்சங்கர்!

டெல்லி: ஹூஸ்டனில் பிரதமர் மோடியுடன் அதிபர் ட்ரம்ப் பங்கேற்கும் நிகழ்ச்சி பற்றி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெய்சங்கர், 100 நாட்களில் வெளியுறவுத் துறையின் சாதனைகளைப் பட்டியலிட்டார். அமெரிக்காவுடனான உறவு நல்ல நிலையில் இருப்பதைச் சுட்டிக்காட்டினார். அழைப்பை ஏற்றுக் கொண்டு இந்திய வம்சாவளி மக்களுடன் பிரதமர் சந்திக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அதிபர் ட்ரம்ப்க்கு மிகுந்த உற்சாகத்துடன் சிறப்பான வரவேற்பு கொடுப்போம் என்றும் கூறினார். இந்த நிகழ்ச்சி மூலம் பாகிஸ்தானுக்கு
 

ஹூஸ்டனில் மோடி – ட்ரம்ப் சந்திப்பு உலகத்திற்கு சொல்லும் முக்கிய செய்தி – அமைச்சர் ஜெய்சங்கர்!
டெல்லி: ஹூஸ்டனில் பிரதமர் மோடியுடன் அதிபர் ட்ரம்ப் பங்கேற்கும் நிகழ்ச்சி பற்றி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெய்சங்கர், 100 நாட்களில் வெளியுறவுத் துறையின் சாதனைகளைப் பட்டியலிட்டார். அமெரிக்காவுடனான உறவு நல்ல நிலையில் இருப்பதைச் சுட்டிக்காட்டினார். அழைப்பை ஏற்றுக் கொண்டு இந்திய வம்சாவளி மக்களுடன் பிரதமர் சந்திக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அதிபர் ட்ரம்ப்க்கு மிகுந்த உற்சாகத்துடன் சிறப்பான வரவேற்பு கொடுப்போம் என்றும் கூறினார்.

இந்த நிகழ்ச்சி மூலம் பாகிஸ்தானுக்கு எதுவும் செய்தி இருக்கிறதா என்று கேட்ட போது, “பாகிஸ்தான் எப்படி வேண்டுமானாலும் இதை புரிந்து கொள்ளலாம். உலகின் மற்ற நாடுகளுக்கும் அதுவே பொருந்தும். பாகிஸ்தான் மட்டுமல்ல, உலகமே ஹூஸ்டனில் நடக்கும் நிகழ்ச்சி பற்றி உற்று நோக்குவார்கள். இந்திய அமெரிக்கர்களின் சாதனையையும் இந்திய – அமெரிக்க உறவின் இன்றைய நிலையையும் தெரிந்து கொள்வார்கள், ” என்றும் அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

உறவு மேம்படும் போது சில சிக்கல்களும் ஏற்படுவது இயல்பானது. நல்ல உறவு இருக்கும் போது வர்த்தகமும் அதிகரிக்கும். வர்த்தகம் இல்லை என்றால் பிரச்சனையே இருக்காது. நெருக்கமான உறவு உள்ள நாட்டுடன் அதிகமான வர்த்தகமும் நடைபெறுவதால், வர்த்தக பிரச்சனைகள் ஏற்படுவதும் இயற்கையானதே, என்றும் சுட்டிக்காட்டினார்.

பிரதமரின் அமெரிக்கப் பயணத்தின் போது காஷ்மீர் விவகாரம் பற்றி வந்தால்? என்ற கேள்விக்கு, அது குறித்து அச்சப்படத் தேவையில்லை. 1972ம் ஆண்டிலிருந்தே அதே நிலைப்பாடு தான் தொடர்கிறது என்று பதிலளித்தார் அமைச்சர் ஜெய்சங்கர்.

– வணக்கம் இந்தியா

From around the web