வார்த்தைக்கு வார்த்தை ‘கலைஞர்’ என்று நெகிழ்ந்த அன்றைய முதல்வர் எம்ஜிஆர்!

சென்னை : கருணாநிதிக்கும் எம்ஜிஆருக்கும் தீராத பகை என்ற எண்ணம் தமிழகத்தில் பொதுவான கருத்தாகும். திமுகவிலிருந்து விலகி அதிமுக தொடங்கி ஆட்சியைப் பிடித்த எம்ஜிஆர், கருணாநிதி ஊழல் குற்றவாளி என்று தமிழகம் முழுவதும் முழங்கினார். இன்னொரு கட்சியின் தலைவரை தனது கட்சிக் கொடியில் வைத்து இருக்கும் அறிவாளி தான் எம்ஜிஆர் என்று பதிலடி கொடுத்தார் கருணாநிதி. இருவரும் எதிரெதிர் துருவங்களாக, தமிழகத்தின் இரு பெரும் சக்திகளாக திகழ்ந்த காலம் அது. அதிமுக, திமுக தவிர வேறு கட்சிகளுக்கு
 

வார்த்தைக்கு வார்த்தை ‘கலைஞர்’ என்று நெகிழ்ந்த அன்றைய முதல்வர் எம்ஜிஆர்!சென்னை : கருணாநிதிக்கும் எம்ஜிஆருக்கும் தீராத பகை என்ற எண்ணம் தமிழகத்தில் பொதுவான கருத்தாகும். திமுகவிலிருந்து விலகி அதிமுக தொடங்கி ஆட்சியைப் பிடித்த எம்ஜிஆர், கருணாநிதி ஊழல் குற்றவாளி என்று தமிழகம் முழுவதும் முழங்கினார். இன்னொரு கட்சியின் தலைவரை தனது கட்சிக் கொடியில் வைத்து இருக்கும் அறிவாளி தான் எம்ஜிஆர் என்று பதிலடி கொடுத்தார் கருணாநிதி.

இருவரும் எதிரெதிர் துருவங்களாக, தமிழகத்தின் இரு பெரும் சக்திகளாக திகழ்ந்த காலம் அது. அதிமுக, திமுக தவிர வேறு கட்சிகளுக்கு தமிழகத்தில் இடம் இல்லை என்ற நிலையே இருந்தது. காமராஜர் முதல்வராக இருந்து தமிழகத்தை ஆண்ட காங்கிரஸ் கட்சி, ஏதாவது எம்.பிக்கள் கிடைத்தால் போதும் என இரு கட்சிகளில் ஒன்றுடன் கூட்டணி சேரும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது.

காங்கிரஸின் முக்கிய தலைவரும் காமராஜரின் சீடருமான குமரி அனந்தன் காந்தி காமராஜர் தேசிய காங்கிரஸ் (கா.கா.தே.கா) என்ற கட்சியை தனியாக நடத்தி வந்தார். அவருடைய மகளும் தற்போதைய தமிழக பா.ஜ.கவின் தலைவருமான தமிழிசையின் திருமணத்திற்கு, அப்போதைய முதல்வர் எம்ஜிஆரும் , கருணாநிதியும் ஒரே நேரத்தில் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.

எம்ஜிஆரும் கருணாநிதியும் அருகருகே அமர்ந்து இருந்து பேசிக் கொண்டிருந்த காட்சி கண்கொள்ளாதது. முதலில் கருணாநிதி பேசும் போது ‘அன்புக்குரிய நண்பரும் மாண்புமிகு தமிழக முதல்வருமான என்னுடைய இனிய நண்பர் அவர்களே’ என்று குறிப்பிட்டார். புரட்சித் தலைவர் என அனைவராலும் அழைக்கப்பட்ட எம்ஜிஆரை, அவ்வாறு சொல்லாவிட்டாலும், எம்ஜிஆர் என பெயர் சொல்லி குறிப்பிடவில்லை கருணாநிதி.

பின்னர் பேசிய எம்ஜிஆர், ‘எனது நண்பரும் என்னுடைய அன்பருமான டாக்டர்.கலைஞர் கருணாநிதி அவர்களே’ என்று குறிப்பிட்டார். மேலும் கருணாநிதி பேசிய கருத்துக்களை பல தடவைகள் மேற்கோள் காட்டியும் எம்ஜிஆர் பேசினார். ஒவ்வொரு முறையும் ‘ கலைஞர்’ என்றே எம்ஜிஆர் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

அரசியலில் எதிரும் புதிருமாக இருந்தாலும், நட்பு ரீதியாக மிகவும் நெருக்கமாக இருந்ததை இந்த நிகழ்ச்சி மூலம் வெளிக் காட்டியுள்ளனர் இந்த தலைவர்கள். எம்ஜிஆர் மறைவுக்கு அதிகாலையில் ராமாவரம் தோட்டத்திற்குச் சென்று முதன் முதலில் அஞ்சலி செலுத்தியவர் கருணாநிதி தான் என்று கூறப்படுவது உண்டு.

தற்போது கருணாநிதியின் உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கும் நிலையில், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் உட்பட அதிமுகவினரும் அனுதாபம் தெரிவித்து நலம் பெற வேண்டி வருவது, தமிழகத்தின் இரு பெரும் தலைவர்களின் நட்பை பறை சாற்றுவதாகத் தான் தெரிகிறது.

A1TamilNews.com

From around the web