நாசாவுக்குப் போகும் மதுரை மாணவி!

மதுரை: 10ம் வகுப்பு படிக்கும் மதுரை மாணவி தான்யா தஸ்னெம் அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு கல்விப் பயணமாக ஒரு வாரம் செல்ல இருக்கிறார். போட்டியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை அமெரிக்க விண்வெளி வீரர் டாக்டர்.டான் தாமஸ் வழங்கினார். கோ4குரு என்ற அமெரிக்க கல்விச் சுற்றுலா சேவை நிறுவனம் தேசிய அறிவியல் தேர்வு 2019 என்ற பெயரில் மாணவர்களுக்கான ஆன்லைன் போட்டியை நடத்தியது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பங்கேற்றனர். இந்தப் போட்டியில்
 

நாசாவுக்குப் போகும் மதுரை மாணவி!

மதுரை: 10ம் வகுப்பு படிக்கும் மதுரை மாணவி தான்யா தஸ்னெம் அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு கல்விப் பயணமாக ஒரு  வாரம் செல்ல இருக்கிறார். போட்டியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை அமெரிக்க விண்வெளி வீரர் டாக்டர்.டான் தாமஸ் வழங்கினார்.

கோ4குரு என்ற அமெரிக்க கல்விச் சுற்றுலா சேவை நிறுவனம் தேசிய அறிவியல் தேர்வு 2019 என்ற பெயரில் மாணவர்களுக்கான ஆன்லைன் போட்டியை நடத்தியது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பங்கேற்றனர்.

இந்தப் போட்டியில் மதுரை மகாத்மா மாண்டசரி மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் 10 வது வகுப்பு படிக்கும் தான்யா வெற்றி பெற்றுள்ளார். மேலும் ஆந்திராவின் குண்டூரை சேர்ந்த சாய் புஜிதா, மஹாராஷ்ட்ராவின் அலிபாக்கை சேர்ந்த அபிஷேக் ஷர்மா ஆகிய இரு மாணவர்களும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்கள்.

இந்த மூன்று மாணவர்களும் அக்டோபர் மாதம் அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு ஒரு வார காலம் கல்விப் பயணமாகச் செல்கிறார்கள். அங்கு விண்வெளி ஆராய்ச்சியாளர்களுடன் கலந்து பேசும் வாய்ப்பையும் பெறுகிறார்கள்.

மேலும், அங்கே உலக அளவிலான விண்வெளி அறிவியல் போட்டியில் இந்த மாணவர்கள் மூவரும் பங்கேற்கிறார்கள். அந்தப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ஃப்ளோரிடா இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி 10 ஆயிரம் டாலர்களுக்கு, அங்கே பயில்வதற்கு ஸ்காலர்ஷிப் வழங்க உள்ளார்கள்.

“இந்திய மாணவர்கள், உலக விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பளிக்கும் வகையில் இந்த அறிவியல் போட்டியை 2017ம் ஆண்டு தொடங்கினோம். அறிவியல் மற்றும் பொது அறிவு சார்ந்த கேள்விகளின் அடிப்படையில் உள்ள இந்தப் போட்டியில், மாணவர்கள் அவர்களின் இருப்பிடங்களிலிருந்தே பங்கேற்கலாம்,” என்று கோ4குரு நிறுவன முதன்மை நிர்வாக அதிகாரி காயம்பு ராமலிங்கம் கூறியுள்ளார்.

அறிவியல் போட்டியில் வெற்றி பெற்று அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்குச் செல்லும் மதுரை மாணவி தான்யாவுக்கு பாராட்டுகள்.

 

From around the web