சென்னையை அடுத்து மதுரையிலும் முழு ஊரடங்கு? அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சூசகம்!!

சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்துள்ள நிலையில் மதுரையிலும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் காவல் நிலையங்களுக்கு தானியங்கி, கை சுத்திகரிப்பான் கருவியை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “அனைத்து அரசு அலுவலகங்களிலும் சோப்பு போட்டு கைகழுவ வசதிகள் செய்து
 

சென்னையை அடுத்து மதுரையிலும் முழு ஊரடங்கு? அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சூசகம்!!சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்துள்ள நிலையில் மதுரையிலும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் காவல் நிலையங்களுக்கு தானியங்கி, கை சுத்திகரிப்பான் கருவியை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,

“அனைத்து அரசு அலுவலகங்களிலும் சோப்பு போட்டு கைகழுவ வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. அவ்வாறு செயல்படுத்த முடியாத அலுவலகங்களில் கை சுத்திகரிப்பு கருவியை பொருத்துவதற்காக தற்போது முயற்சி எடுத்துள்ளோம். மாநகர எல்லையில் இருக்கும் 27 காவல் நிலையங்களுக்கும் கருவி வழங்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று நிலைமை தினந்தோறும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. நோய் தொற்று அதிகரிப்பு குறித்து முதல்வர் தொடர்ந்து கேட்டு வருகிறார். நிலைமைக்கு ஏற்றவாறு ஊரடங்கு அமல் படுத்துவது குறித்து முதல்வர் அறிவிப்பார். எந்த அறிவிப்பாக இருந்தாலும் முன் கூட்டியே அறிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

வெளிமாவட்டங்களிலிருந்து மதுரைக்கு வருபவர்களை முழுமையாக சோதனை செய்து தனிமைப் படுத்தாததால் அங்கே கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில் மதுரைக்கும் முழு ஊரடங்கு வரப்போகிறது என்பதையே அமைச்சரின் பேட்டி சூசகமாக இருப்பதாகத் தெரிகிறது.

A1TamilNews.com

From around the web