ஒண்டிவீரனுக்காக ஓடி வந்த மு.க.ஸ்டாலின்… நெல்லையில் விழா!

திருநெல்வேலி: விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 248 வது நினைவு நாளுக்காக ஒரு நாள் பயணமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நெல்லை வந்தார். நேற்று காலையில் தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தில் வந்து இறங்கிய மு.க.ஸ்டாலின், நேராக திருநெல்வேலி சென்று விழாவில் பங்கேற்று மாலை விமானம் மூலம் சென்னை திரும்பினார். ஒண்டிவீரன் விழாவில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதாவது, “இரண்டாயிரம் பேர் கொண்ட பெரும்படையுடன் வந்த ஆங்கிலேயே தளபதி கர்னல் ஹெரானை எதிர்த்து போரிட்டு வென்றவரும், இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு
 

திருநெல்வேலி: விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 248 வது நினைவு நாளுக்காக ஒரு நாள் பயணமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நெல்லை வந்தார்.

நேற்று காலையில் தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தில் வந்து இறங்கிய மு.க.ஸ்டாலின், நேராக திருநெல்வேலி சென்று விழாவில் பங்கேற்று மாலை விமானம் மூலம் சென்னை திரும்பினார். 

ஒண்டிவீரன் விழாவில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதாவது,

“இரண்டாயிரம் பேர் கொண்ட பெரும்படையுடன் வந்த ஆங்கிலேயே தளபதி கர்னல் ஹெரானை எதிர்த்து போரிட்டு வென்றவரும், இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்டவர்களுள் ஒருவருமான மாவீரன் ஒண்டிவீரன். இன்று அவருடைய 248வது நினைவு நாளில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

சாதிபேதமின்றி வாழ்ந்த மாவீரன் ஒண்டிவீரன் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த காலக் கட்டங்களில் பல்வேறு முன்னெடுப்புகள் செய்யப்பட்டன.

மாவீரன் ஒண்டிவீரன் அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று தலைவர் கலைஞர் அவர்களிடம் வைக்கப்பட்ட கோரிக்கையை உடனடியாக ஏற்று, திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்திற்கு எதிரில் 63.38 சென்ட் நிலம் ஒதுக்கினார். மணிமண்டபம் கட்டுவதற்காகவும், ஒண்டிவீரனின் திருவுருவச் சிலை அமைக்கவும் 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடும் செய்தார்.

மேலும், அருந்ததியர் மக்களின் சமூக, கல்வி, பொருளாதார முன்னேற்றத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து பாடுபடும்,” என்று கூறியுள்ளார்.

நேற்று மு.க.ஸ்டாலினின் 44 வது திருமண நாள் என்ற போதிலும், நெல்லைக்கு நேரடியாக வந்து மரியாதை செலுத்திவிட்டுச் சென்றது அந்தப் பகுதி மக்களை நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

 

 

From around the web