தமிழகத்தின் அரசியல் வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் – மு.க.அழகிரி அதிரடி

தமிழ்நாட்டு அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்புவார் என்று மு.க.அழகிரி கூறியுள்ளார். மு.க.அழகிரியை சந்தித்த செய்தியாளர்கள, “ஆளுமை மிக்க அரசியல் தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது” என்று ரஜினிகாந்த் கூறியுள்ளாரே, அது குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு “ ரஜினி சொல்வது உண்மை தான்” என்று பதிலளித்தார். ஸ்டாலின் அந்த வெற்றிடத்தை நிரப்பவில்லை என்று கேட்ட போது “ அவர்(ரஜினி) சொன்னது உண்மை” என்று கூறியுள்ளார். ரஜினி கட்சி ஆரம்பிக்கும் போது அதில் சேர்வீர்களா என்று
 

தமிழகத்தின் அரசியல் வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் – மு.க.அழகிரி அதிரடிமிழ்நாட்டு அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்புவார் என்று மு.க.அழகிரி கூறியுள்ளார்.

மு.க.அழகிரியை சந்தித்த செய்தியாளர்கள, “ஆளுமை மிக்க அரசியல் தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது” என்று ரஜினிகாந்த் கூறியுள்ளாரே, அது குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு “ ரஜினி சொல்வது உண்மை தான்” என்று பதிலளித்தார்.

ஸ்டாலின் அந்த வெற்றிடத்தை நிரப்பவில்லை என்று கேட்ட போது “ அவர்(ரஜினி) சொன்னது உண்மை” என்று கூறியுள்ளார்.

ரஜினி கட்சி ஆரம்பிக்கும் போது அதில் சேர்வீர்களா என்று கேட்டதற்கு, “அதைப் பற்றியெல்லாம் சொல்ல முடியாது” என்று கூறிவிட்டு காரில் புறப்பட்டுச் சென்றார் மு.க.அழகிரி.

திமுகவின் தென் மண்டலச் செயலாளர், மத்திய அமைச்சர் என முக்கியமானவராக திகழ்ந்த மு.க.அழகிரியை, கருணாநிதி உயிருடன் இருந்த போதே திமுகவிலிருந்து நீக்கினார்கள். மு.க.ஸ்டாலின் தலைவர் ஆவதற்கு முட்டுக்கட்டையாக அழகிரி இருக்கிறார் என்பதற்காக இந்த நடவடிக்கை என்று அரசியல் வட்டாரத்தில் கூறப்பட்டது.

அரசியலிலிருந்து ஒதுங்கி இருக்கும் மு.க.அழகிரியின் பிறந்தநாளின் போது வாழ்த்து தெரிவித்த ரஜினி, “அரசியலில் கடைசிப் பக்கம் என்பது கிடையாது. நீங்கள் மீண்டும் அரசியலில் ஜொலிப்பீர்கள்,” என்று கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இருவரும் நீண்டநாட்களாகவே நல்ல நண்பர்களாக இருந்து வருகிறார்கள். அழகிரியின் மகன் திருமணத்திற்காக மதுரைக்கு நேரில் வந்திருந்தார் ரஜினி.

ரஜினி தொடங்கும் கட்சியில் தென் மண்டலப் பொறுப்பாளராக மு.க.அழகிரி செயல்படுவார் என்று அரசல் புரசலாக பேச்சுக்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் ரஜினி சொன்னது சரிதான், தமிழக அரசியல் வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்புவார் என்று மு.க.அழகிரி கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

https://www.A1TamilNews.com

From around the web