இந்தியாவில் 17 மாநிலங்களுக்கு வெட்டுக்கிளிகள் பரவும்! ஐநா உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை.!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பு ஒரு புறம் மற்றொரு புறம் உணவுப் பஞ்சத்தை ஏற்படுத்தும் வெட்டுக்கிளிகள் குறித்த அபாயம் ஒரு புறம் என உலக நாடுகள் பீதியில் ஆழ்ந்துள்ளன. வெட்டுக்கிளிகள் ஆப்பிரிக்காவில் தொடங்கிஅரபு நாடுகள், பாகிஸ்தான் வழியாக இந்தியாவின் வடமாநிலங்களான ராஜஸ்தான், குஜராத், மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா பகுதிகளில் பெரும் சேதத்தை விளைவித்து வருகிறது. இந்தக் கூட்டம் ஒரு நாளைக்கு 150 கி.மீட்டர் வரை பயணம் செய்யும் இயல்புடையவை. இதே போல் இந்தியாவில் மட்டும் 17
 

இந்தியாவில் 17 மாநிலங்களுக்கு வெட்டுக்கிளிகள் பரவும்!  ஐநா உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை.!லகை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பு ஒரு புறம் மற்றொரு புறம் உணவுப் பஞ்சத்தை ஏற்படுத்தும் வெட்டுக்கிளிகள் குறித்த அபாயம் ஒரு புறம் என உலக நாடுகள் பீதியில் ஆழ்ந்துள்ளன.

வெட்டுக்கிளிகள் ஆப்பிரிக்காவில் தொடங்கிஅரபு நாடுகள், பாகிஸ்தான் வழியாக இந்தியாவின் வடமாநிலங்களான ராஜஸ்தான், குஜராத், மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா பகுதிகளில் பெரும் சேதத்தை விளைவித்து வருகிறது.

இந்தக் கூட்டம் ஒரு நாளைக்கு 150 கி.மீட்டர் வரை பயணம் செய்யும் இயல்புடையவை. இதே போல் இந்தியாவில் மட்டும் 17 மாநிலங்களில் பரவும் என ஐநா உணவு மற்றும் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மகாராஷ்டிராவிலிருந்து பீகார் ,நேபாளம், வங்க தேசம் வரை பரவலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த வெட்டுக்கிளிகள் மட்டுமல்ல துணைக்கூட்டம் ஒன்றும் ஜூன் மாத இறுதியில் இந்தியாவிற்குள் நுழையத் தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தப் பரவல் ஜூலை இறுதி வரை நீடிக்கும் என்றும், இதற்கான தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் ஐ.நா. உணவு பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

A1TamilNews.com

From around the web