புதுச்சேரியில் இன்று முதல் மதுபானக்கடைகள் திறப்பு!

கொரோனா பரவலக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே31ம் தேதி வரை நான்காவது கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. மார்ச் 24ம் தேதி முதல் புதுச்சேரியில் மதுபானக்கடைகள் மூடப்பட்டுள்ளன. நான்காவது கட்ட ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் மதுபானக் கடைகளைத் திறக்க புதுச்சேரி அரசு பரிசீலித்து வந்தது. அங்கு வசிப்போர் தமிழகத்தின் கடலூர், விழுப்புரம், நாகை மாவட்டங்களில் வந்து வாங்கிச் செல்கின்றனர். இதனைத் தடுக்கும் பொருட்டும் அரசின் பொருளாதாரத்தை சீரமைக்கும் பொருட்டும் மாநில அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றியது.
 

புதுச்சேரியில் இன்று முதல் மதுபானக்கடைகள் திறப்பு!கொரோனா பரவலக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே31ம் தேதி வரை நான்காவது கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. மார்ச் 24ம் தேதி முதல் புதுச்சேரியில்  மதுபானக்கடைகள் மூடப்பட்டுள்ளன.

நான்காவது கட்ட ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் மதுபானக் கடைகளைத் திறக்க புதுச்சேரி அரசு பரிசீலித்து வந்தது. அங்கு வசிப்போர் தமிழகத்தின் கடலூர், விழுப்புரம், நாகை மாவட்டங்களில் வந்து வாங்கிச் செல்கின்றனர்.
இதனைத் தடுக்கும் பொருட்டும் அரசின் பொருளாதாரத்தை சீரமைக்கும் பொருட்டும் மாநில அமைச்சரவையில்  தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் புதுவை  கவர்னர் கிரண்பேடி ஊரடங்கு காலத்தில் மதுபானக் கடைகளைத் திறக்க அனுமதிக்க முடியாது என கோப்புக்களில் கையெழுத்திட மறுத்துவிட்டார்.

ஊரடங்கு காலத்தில் விற்பனை செய்யும் மதுபாட்டில்களுக்கு கொரோனா வரி விதிக்க வேண்டும் என்ற கவர்னரின் கோரிக்கையை அரசு ஏற்றுக் கொண்ட பிறகு மதுபானக்கடைகளைத் திறப்பதற்கு கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.  மேலும் தமிழகத்தைப் போல மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்தினால் தான் அரசின் வருவாயைப் பெருக்க முடியும் என்றும் கவர்னர் வலியுறுத்தியுள்ளார்.

மதுக்கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மதுபான கடைகள் திறக்கப்படும். கடைக்கு வருபவர்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும். புதிய கொரோனா வரி விதிக்கப்பட்டுள்ளதால் மதுபானங்களின் விலை தமிழகத்தை விட அதிகரிக்கும் என மதுபானப் பிரியர்கள் கூறியுள்ளனர்.

A1TamilNews.com

From around the web