சுப நிகழ்வுகளில் வாழைமரம், மாவிலை தோரணம் ஏன் கட்டுகிறோம்?

இந்துக்களின் சமயச் சடங்குகளில் ஒவ்வொரு விஷயத்திற்கும் அறிவியல் பூர்வமான காரணங்கள் உண்டு. அதற்குரிய சரியான விளக்கங்களை அறிந்து கடைபிடித்து வந்தால் வளமான வாழ்வு அமையும்.
திருமணம், காது குத்துதல், பிறந்தநாள் விழா, கோயில் பண்டிகைகள் என அனைத்து சுபநிகழ்வுகளிலும் வாழை மரம் கட்டி, மாவிலைத் தோரணம் கட்டுவார்கள்.
விழாவிற்கு வெவ்வேறு ஊர்களில் இருந்து பயணம் செய்து பலதரப்பட்ட மக்கள் வருகை தருவார்கள்.
கூட்டம் அதிகரிப்பதால் கரியமில வாயு உற்பத்தியாகும். குலை தள்ளிய வாழை என்பது பூரண ஆயுள் பெற்று விட்ட வாழைமரத்தின் நிலை.வாழை மரமானது கார்பன் டை ஆக்சைடை உட்கொண்டு ஆக்சிஜனை வெளியிடுகிறது.
சுத்தமான ஆரோக்கியமான காற்றை உட்கொள்வதால் வந்திருக்கும் மக்களுக்கு சுகாதாரக் கேடு உண்டாகாது.மாவிலை தோரணம் கட்டுதல் தீய சக்திகளிடமிருந்து நம்மை பாதுகாக்கிறது. மாவிலைத் தோரணம் அழுகாது.
காய்ந்து உலரவே செய்யும். நமது வாழ்க்கையும் எல்லா வளமும் பெற்று , இன்பமானதாக அமைய வேண்டும் என்ற நோக்கத்துடனேயே மாவிலைத் தோரணம் கட்டுகிறோம்.
இத்தகைய விளக்கங்களை நாம் அறிவதோடு அடுத்த தலைமுறையான நமது குழந்தைகளுக்கும் எடுத்துச் சொல்லி ஆரோக்கியமான, சுகாதாரமான சுற்றுபுறத்தை உருவாக்க உறுதி காண்போம்.
