தேனின் மருத்துவப் பயன்கள்!

தித்திக்கும் சுவையான தேனை தினசரி உடலில் சேர்த்து வர அபரிமிதமான பலன்கள் கிட்டும். தேனும், தினை மாவும் மட்டுமே உணவாகக் கொண்டிருந்தனர் பழங்காலத் தமிழர்கள். அவர்களின் வாழ்க்கை ஆரோக்கியமானதாக இருந்தது. சுத்தமான தேனில் எறும்பு மொய்க்காது. சிறு காகிதத்தில் விட சிறு துளியாக drop ஆகவே இருக்குமே தவிர பேப்பர் தேனை உறிஞ்ச முடியாது. இந்த வகையில் பெறப்பட்ட தேனை அன்றாட வாழ்வில் பயன்படுத்துவது எங்ஙனம்?
 

தேனின் மருத்துவப் பயன்கள்..!தித்திக்கும் சுவையான தேனை தினசரி உடலில் சேர்த்து வர அபரிமிதமான பலன்கள் கிட்டும். தேனும், தினை மாவும் மட்டுமே உணவாகக் கொண்டிருந்தனர் பழங்காலத் தமிழர்கள். அவர்களின் வாழ்க்கை ஆரோக்கியமானதாக இருந்தது.

சுத்தமான தேனில் எறும்பு மொய்க்காது. சிறு காகிதத்தில் விட சிறு துளியாக drop ஆகவே இருக்குமே தவிர பேப்பர் தேனை உறிஞ்ச முடியாது. இந்த வகையில் பெறப்பட்ட தேனை அன்றாட வாழ்வில் பயன்படுத்துவது எங்ஙனம்?என்னென்ன பொருட்களுடன் சேர்த்துப் பருக என்னென்ன பலன்கள் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

தினசரி இரவில் தூங்குவதற்கு முன் பாலில் தேன் கலந்து சாப்பிட ஆழ்ந்த நித்திரை வருவதுடன் இதயத்தையும் பலப்படுத்தும். எந்தப் பழச்சாறுடனும் தேன் கலந்து சாப்பிட உடலுக்கு நல்ல சக்தியும், புத்துணர்ச்சியும் கிடைக்கும்.

மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்தத்தை சுத்திகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும்.எலுமிச்சை பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல், சளி குணமாகும்.

நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும். ஆரஞ்சுப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும். ரோஜாப்பூ குல்கந்தில் தேன் கலந்து சாப்பிட்டால் உடல் சூட்டை சீர்படுத்தும். தேங்காய்பாலில் தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண், வாய்ப்புண்கள் ஆறும்.

இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தம் தீரும். கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்த சோகை குணமாகும். தேனில் சுண்ணாம்பு கலந்து தடவ கட்டிகள் உடையும் அல்லது வீக்கம் குறையும்.

A1TamilNews.com

From around the web