காலை உணவை skip பண்ணாதீங்க…!

பரபரப்பாக இயங்கி வரும் இன்றைய சூழ்நிலையில் லேட்நைட் டின்னருடன் காலையில் தாமதமாக எழுந்து அன்றைய காலை உணவை தவிர்த்து அலுவலகம், பள்ளி செல்வதே லேட்டஸ்ட் டிரண்ட்.
நமது உடலின் இயக்கத்தைப் பொறுத்த வரை ஒவ்வொரு நாளும் காலையில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவே அன்றைய நாளின் புத்துணர்ச்சியையும், மனநிலையையும் தீர்மானிக்கிறது.
காலை நேர பரபரப்பில் சமையலறையில் அதிக நேரம் செலவிடுவதும் பெரும் சவாலான விஷயமே. எளிதான சமையலில் ஆனால் சத்தான உணவுகளை எடுத்துக் கொண்டால் உடலும் , உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும்.
முட்டை உண்ணும் பழக்கம் உள்ளவர்கள் எளிமையான சமையலில் காலை நேரத்தில் புரதச் சத்து மிகுந்த முட்டையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இது இடைவேளையில் நொறுக்குத் தீனி சாப்பிடுவதைத் தவிர்ப்பதோடு வயிற்றுக்கு நிறைவான உணர்வையும் தருகிறது.
முட்டை சாப்பிடாதவர்கள் காலை உணவில் புரதம் நிறைந்த தயிரைச் சேர்த்துக் கொள்ளலாம். இதுவும் பசியைக் கட்டுப்பட்டுத்துவதோடு குடலைப் பாதுகாக்கிறது.
நார்ச்சத்து அதிகம் உள்ள ஓட்சை காலை உணவாகக் கொள்ளலாம். ஓட்சும் வயிறு நிறைந்த உணர்வை அளிப்பதோடு இருதயம், உயர் ரத்த அழுத்த குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.
இட்லி, இடியாப்பம் போன்ற காலை உணவு எடுத்துக் கொள்வதாக இருந்தால் பாதாம், பிஸ்தா போன்ற கொட்டை வகைகளை 2 ஸ்பூன் அளவு சேர்த்துக் கொள்ளலாம்.
பழவகைகளான பப்பாளி, ஆரஞ்சு இவற்றோடு பிளாக் விதை, கிரீன் டீ காலை உணவில் சேர்த்துக் கொள்ள மூளை, நரம்பு மண்டலம் வலுவடையச் செய்யும்.