எலுமிச்சை இயற்கை சுத்திகரிப்பான்…!

அன்றாட சமையலில் எலுமிச்சைக்கு தனி இடம் உண்டு. சிட்ரிக் ஆசிட் நிறைந்த எலுமிச்சை பானம் தாகத்தை தணிப்பதுடன் உடல் வெப்பநிலையை சமச்சீராக வைக்க உதவுகிறது. உடலுக்கு புத்துணர்ச்சியை அளிப்பதோடு தெம்பாகவும் உணர வைக்கும். அழுக்குப் படிந்து நிறம் மங்கி காணப்படும் vegetable cutterஐ எலுமிச்சை சாறில் ஊற வைத்து கழுவ பளிச் சென பழைய நிறம் வந்து சேரும். எலுமிச்சை, உப்பு கலந்து பித்தளை, செப்பு பாத்திரங்களை துலக்க டாலடிக்கும் அனைத்து பாத்திரங்களும். துரு பிடித்த இடங்கள்
 

எலுமிச்சை  இயற்கை சுத்திகரிப்பான்…!ன்றாட சமையலில் எலுமிச்சைக்கு தனி இடம் உண்டு. சிட்ரிக் ஆசிட் நிறைந்த எலுமிச்சை பானம் தாகத்தை தணிப்பதுடன் உடல் வெப்பநிலையை சமச்சீராக வைக்க உதவுகிறது. உடலுக்கு புத்துணர்ச்சியை அளிப்பதோடு தெம்பாகவும் உணர வைக்கும்.
அழுக்குப் படிந்து நிறம் மங்கி காணப்படும் vegetable cutterஐ எலுமிச்சை சாறில் ஊற வைத்து கழுவ பளிச் சென பழைய நிறம் வந்து சேரும்.

எலுமிச்சை, உப்பு கலந்து பித்தளை, செப்பு பாத்திரங்களை துலக்க டாலடிக்கும் அனைத்து பாத்திரங்களும். துரு பிடித்த இடங்கள் , கேஸ் ஸ்டவ் பர்னர்கள் அனைத்தையும் சுத்தம் செய்ய ஏற்றது எலுமிச்சை சாறு.

நாம் கடையில் வாங்கும் காய்கறிகள் , பழங்களை எலுமிச்சை பானத்தில் 10 நிமிடங்கள் ஊற வைத்து கழுவிட நச்சுப் பொருட்கள் போயே போச்சு. வெள்ளை வினிகர், எலுமிச்சை சாறு கலந்து சமையல் அறையின் எண்ணெய் பசைப் படிந்த ஜன்னல்களை எளிதில் சுத்தம் செய்யலாம்.

நீர்த்த எலுமிச்சை பானத்தை ஒரு தெளிப்பான் பாட்டிலில் நிரப்பி, கண்ணாடி கதவின் மேல் தெளித்து காய விட வேண்டும். அரை மணி நேரம் கழித்து கண்ணாடியை நீரில் மறுபடியும் கழுவ கண்ணாடி பளபளக்கும்.

எலுமிச்சை மற்றும் பேக்கிங் சோடாவை கழிவறை கோப்பைகளில் தூவி விட்டால் இயற்கையான ரசாயன மாற்றங்கள் மூலம் கறை ஓடியே போகும். டப்பர்வேர் பாத்திரங்கள் சிறிது பேக்கிங் சோடாவை கறைப் படிந்த டப்பர்வேர் பாத்திரங்களில் போட்டு, ஒரு அரை எலுமிச்சையை எடுத்து, அதன் உட்பக்கமும் வெளிப்பக்கமும் நன்கு சுரண்ட வேண்டும்.

இதனால் கறைகள் நீங்கி பழைய வெண்மையுடன் காட்சி அளிக்கும் டப்பர்வேர் பாத்திரங்கள்.

http://www.A1TamilNews.com

From around the web