பெரியோர்களே! தாய்மார்களே!! அண்ணாமலை vs டாக்டர்.செந்தில்குமார் எம்.பி. போட்டியைக் காணத் தயாராகுங்கள்!!
தமிழகத் தொலைக்காட்சியிலே முதன் முறையாக இரு அரசியல் கட்சித் தலைவர்களுக்கு இடையே நேரடி விவதாம் நடைபெற உள்ளது.
ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் சேர்ந்த அண்ணாமலை தமிழக பாஜகவின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தித் திணிப்பு தொடர்பாக திமுகவை சேர்ந்த எவருடனும் நேருக்கு நேர் விவாதிக்கத் தயார் என்று சவால் விடுத்து இருந்தார் அண்ணாமலை.
இந்த சவாலை ஏற்று நேரடியாக விவாதிக்கத் தயார் என்று தர்மபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். செந்தில்குமார் அறிவித்து இருந்தார். இதை ஏற்றுக் கொண்ட அண்ணாமலை, நமக்கு தொலைக்காட்சி நிறுவனங்கள் இல்லை, நம்மை எந்த தொலைக்காட்சியாவது அணுக வேண்டும் . விவாதம் நாகரீமாகவும் மரியாதையுடனும் இருக்க ஒரு நெறியாளர் தேவை என்றும் கூறியிருந்தார்.
“என்னை ஏற்கனவே 4 தொலைக்காட்சி சேனல்கள் அணுகியுள்ளனர். எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. உங்களுக்கு விருப்பமான தொலைக்காட்சியை தேர்ந்தெடுங்கள். நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பாக இருக்க வேண்டும்.
மரியாதையுடன் நாகரீகமான முறையில் விவாதம் இருக்கும் என்பதை நான் உறுதி செய்கிறேன்.அதை நீங்களும் உறுதி செய்தால், இருவருக்கும் இடையே ஒரு நெறியாளர் தேவையில்லை. ஆனாலும் உங்கள் விருப்பம்,” என்று டாக்டர்,செந்தில்குமார் பதிலளித்துள்ளார்.
“உங்களை அணுகிய தொலைக்காட்சி சேனல் ஒன்று என்னிடமும் கேட்டார்கள். நான் சரி சொல்லி விட்டேன். இனிமேல் அவர்கள் இதை முன்னெடுத்துச் செல்வார்கள்,” என்று அண்ணாமலையும் கூறிவிட்டார்.
ஆக, இரு தலைவர்களும் இந்தித் திணிப்பு விவகாரம் குறித்து தொலைக்காட்சியில் நேரடி விவாதம் நடத்த இசைந்துள்ளார்கள். தமிழக அரசியலில் மிகவும் புதிய நிகழ்வு ஒன்று நடக்கப் போகிறது.
Already 4 channels have approached me.,
I requested them to get your concurrence.,
I have no issues. Your choice.
It has to be live.I can assure for decent debate in a dignified manner.
If you too can assure the Same a moderator wouldn't be necessary.But again your choice. https://t.co/m2awoVl8au
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) September 10, 2020
இருவரையும் நேரடியாக மோதவிட்டு கல்லா கட்டப் போகும் தொலைக்காட்சி நிறுவனம் யாரோ? இன்னும் தெரியவில்லை. இது வழக்கமான தொலைக்காட்சி விவாதம் போல் இல்லாமல் நாகரீகமாக இருந்தால் அது தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் வெற்றி என்றே சொல்லலாம்!