பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வருபவர்களுக்கு மறுபடியும் டெஸ்ட் கட்டாயம்! மத்திய அரசு தடாலடி!
இந்தியா முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மத்திய, மாநில அரசுகளால் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வந்த போதிலும் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு கொரோனா பரிசோதனைக்கான புதிய நிபந்தனைகளை அறிவித்துள்ளது.
இதன்படி கொரோனாவிற்கான அறிகுறி இருப்பவர்களுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்தால் அவர்களுக்கு மீண்டும் மறு பரிசோதனை செய்யப்பட வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ரேபிட்கிட் பரிசோதனைகளில் கொரோனா இல்லை என்ற தகவல் வந்தாலும் சிலருக்கு அறிகுறி இருப்பதால் அவர்களின் உடல் மற்றும் மனநலனை காக்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்த சுற்றறிக்கை ஒன்றையும் மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு குழு நியமிக்கப்பட்டு கொரோனா நோயாளிகள் கண்டறியப்படுவார்கள் எனவும், ரேபிட்கிட் சோதனை தகவல்களை அவ்வப்போது பகுப்பாய்வு செய்ய வேண்டும் எனவும் மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
A1tamilnews.com