ஆட்சி மாற்றம் இப்போ இல்லன்னா இனி எப்பவும் இல்லை ரஜினி!
சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் ரஜினிகாந்த் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர் , மக்களிடம் ஆட்சி மாற்றத்திற்கான எழுச்சி தெரிந்தால் தான் அரசியல் அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் எனும் முழக்கத்தோடு ரசிகர்கள் மக்களை சந்திக்க வேண்டும் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
மாற்றம் ஏற்படும் என்று தெரியாமல் அரசியல் கட்சி துவங்கி என்ன பலன் அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் , இப்போ இல்லன்னா இனி எப்பவும் இல்லை .தலைவரின் சொல்லை கேட்பவன்தான் சிறந்த தொண்டன்.
வருங்கால முதல்வர் ரஜினி என்ற கோஷத்தை முதலில் நிறுத்துங்கள் என கூறினார். அரசியல் மாற்றத்திற்கான 3 திட்டங்களை ரஜினிகாந்த் கூறி உள்ளார். அந்த திட்டங்கள் அதில் , தேர்தல் பணி செய்ய கட்சியில் உருவாக்கப்படும் பதவிகள் தேர்தல் நேரத்தில் மட்டுமே பயன்படுத்தபடும்.
60 முதல் 65 சதவீதம் 50வயதுக்கு கீழ் உள்ள நல்ல மனிதர்களுக்கும், 35 முதல் 40 சதவீதம் வேறு கட்சியில் இருக்கும் வாய்ப்பு கிடைக்காத நல்ல மனிதர்களுக்கும்,மீதமுள்ளவர்களி
கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை வேண்டும் என்பதே என் திட்டம் ஆட்சியில் தவறு செய்தால் கட்சித்தலைமை தூக்கி எறியலாம் . அவசியமான பதவிகள் மட்டுமே என் கட்சியில் இருக்கும். கட்சியின் தலைவராக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம் என கூறினார்.