அதிர்ச்சி!முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்!

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மூளை அறுவை சிகிச்சைக்காக டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதோடு அவருக்கு கொரோனாத் தொற்றும் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவரது உடல்நிலையை தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவ வல்லுநர்கள் குழு தொடர்ந்து தொடர்ந்து கண்காணித்து வந்தது. அவர் கோமா நிலைக்கு சென்றதால் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்று விட்டதாகவும் உடல்நிலை மிகவும் பின்னடைந்து வருவதாகவும் நேற்று வெளியிட்ட செய்திக்
 

அதிர்ச்சி!முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்!முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மூளை அறுவை சிகிச்சைக்காக  டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதோடு அவருக்கு கொரோனாத் தொற்றும் உறுதி செய்யப்பட்டது.  

இதனையடுத்து அவரது உடல்நிலையை தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவ வல்லுநர்கள் குழு தொடர்ந்து தொடர்ந்து கண்காணித்து வந்தது.

அவர் கோமா நிலைக்கு சென்றதால் வென்டிலேட்டர் உதவியுடன்  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  தொடர்ந்து ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்று விட்டதாகவும் உடல்நிலை மிகவும் பின்னடைந்து வருவதாகவும் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  

இந்நிலையில் தற்போது கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என மருத்துவ மனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

A1TamilNews.com