கொரோனா அச்சம் – பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கொரோனா இந்தியாவில் வேகமாக பரவி வருவதால் டெல்லியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் சுமார் 100 நாடுகளில் 1,09,400க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்று காரணமாக 4 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் வைரஸ் பரவி வருவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியில் வரும் 31ஆம் தேதி வரை அனைத்து
Mar 13, 2020, 06:00 IST

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் சுமார் 100 நாடுகளில் 1,09,400க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்று காரணமாக 4 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் வைரஸ் பரவி வருவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியில் வரும் 31ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ளார்.
இதனிடையே தமிழகத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. ஆனால் விடுமுறை அளிக்க முடியாது என நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.