இப்போதைய டிரெண்ட் எலக்ட்ரானிக் மாஸ்க் தான்!
உலகம் முழுவதும் அதன் தாக்கத்தை மிகத் தீவிரமாக ஏற்படுத்தி வரும் கொரோனாவைக் கட்டுப்படுத்த அனைத்து உலக நாடுகளும் பல்வேறு தடுப்பு முறைகளைக் கையாண்டு வருகிறது. இந்தியா உட்பட பல நாடுகளில் முகக்கவசம் அணிந்து மட்டுமே பொதுவெளியில் நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீறுபவர்களுக்கு அபராத தொகை விதிக்கப்பட்டு வருகிறது.
கொரோனாவைப் பொறுத்தவரை தடுப்பு முறைகளை இனி எப்போதுமே தொடர்ச்சியாக கடைப்பிடிக்க வேண்டியதிருக்கலாம் என விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர் .இதனையடுத்து சந்தைகளில் பலதரப்பட்ட விதவிதமான வண்ணங்களில் முகக்கவசங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தென் கொரியாவைச் சேர்ந்த நிறுவனமொன்று எலக்ட்ரானிக் மாஸ்க் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த மாஸ்க்கில் காற்றில் இருக்கும் மாசு சுத்தம் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாஸ்க்கை தொடர்ந்து நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம் என்றும் பேட்டரியுடன் சுத்திகரிப்பான்களும் இணைக்கப்பட்டிருக்கிறது .
இதனால் உள்ளே மற்றும் வெளியேறும் காற்றையும் தூய்மையாக்கும் என அந்த தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. பேட்டரியின் வேகத்தையும் சுவாசத்திற்கு ஏற்பவும், சுத்திகரிப்பு வேகத்தையும் மாற்றிக்கொள்ளலாம். இந்த நவீன மாஸ்க் உலகம் முழுவதும் மிக விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது.
A1tamilnews.com