காங்கிரஸ் கட்சியின் 135வது பிறந்தநாள்!
காங்கிரஸ் கட்சியின் 135வது ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லி காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சித் தலைவர் சோனியா காந்தி கொடியேற்றி வைத்தார். பின்னர் கட்சியினர் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் தொடர்ந்து தொண்டர்களுக்கும், குழந்தைகளுக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார் சோனியா காந்தி. முன்னாள் பிரதமர் டாக்டர். மன்மோகன் சிங், மூத்த தலைவர் மோதிலால் வோரா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் 135 வது பிறந்த நாளை
Dec 28, 2019, 05:52 IST
காங்கிரஸ் கட்சியின் 135வது ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லி காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சித் தலைவர் சோனியா காந்தி கொடியேற்றி வைத்தார். பின்னர் கட்சியினர் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்
தொடர்ந்து தொண்டர்களுக்கும், குழந்தைகளுக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார் சோனியா காந்தி. முன்னாள் பிரதமர் டாக்டர். மன்மோகன் சிங், மூத்த தலைவர் மோதிலால் வோரா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் 135 வது பிறந்த நாளை கட்சியினர் கொண்டாடி வருகிறார்கள்.
– வணக்கம் இந்தியா