பொங்கல் பரிசு: புதுச்சேரியில் நாராயணசாமி கிரண் பேடி பனிப்போர் முற்றுகிறது!

புதுச்சேரி: பொங்கலை முன்னிட்டு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விவகாரத்தில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கும், துணை ஆளுநர் கிரண் பேடிக்கும் இடையே வார்த்தைப் போர் முற்றி வருகிறது. வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு என்று கிரண் பேடி சொல்லியிருந்தார். கடந்த ஆண்டு துணை ஆளுநரின் இந்த பரிந்துரையை தனது அமைச்சரவை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த ஆண்டு பொங்கல் பரிசுக்கான பொருட்கள் பட்டியலுடன் கோப்பை துணை ஆளுநருக்கு அனுப்பியுள்ளேன். பக்கத்தில் தமிழ்நாட்டில்
 
புதுச்சேரி: பொங்கலை முன்னிட்டு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விவகாரத்தில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கும், துணை ஆளுநர் கிரண் பேடிக்கும் இடையே வார்த்தைப் போர் முற்றி வருகிறது.
 
வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு என்று கிரண் பேடி சொல்லியிருந்தார். கடந்த ஆண்டு துணை ஆளுநரின் இந்த பரிந்துரையை தனது அமைச்சரவை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த ஆண்டு பொங்கல் பரிசுக்கான பொருட்கள் பட்டியலுடன் கோப்பை துணை ஆளுநருக்கு அனுப்பியுள்ளேன்.
 
பக்கத்தில் தமிழ்நாட்டில் 1000 ரூபாய் வழங்குவதற்குத் தான் உயர்நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளது. பொங்கல் பரிசுப் பொருட்கள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்குவதை தடை செய்யவில்லை. அதே தீர்ப்பு புதுச்சேரிக்கும் பொருந்தும். துணை ஆளுநர் பொங்கல் பரிசுக்கான கோப்புக்கு ஒப்புதல் வழங்கா விட்டால் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று நாராயணசாமி கூறியிருந்தார்.
 
அதற்கு பதிலடி கொடுத்துள்ள துணை ஆளுநர் கிரண் பேடி, சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு தான் ஒப்புதல் வழங்க முடியும். முதல்வர் அனுப்பும் கோப்புகளுக்கு அப்படியே ஒப்புதல் வழங்க துணை ஆளுநர் ரப்பர் ஸ்டாம்ப் இல்லை. முதல்வர், வார்த்தைகளை முறையாகப் பேச வேண்டும். கோப்புகளிலும் சரியான வார்த்தைகளை உபயோகிக்க வேண்டும். எந்த அச்சுறுதலுக்கும் எனக்குப் பயம் இல்லை என்று கூறியுள்ளார்.
 
பொங்கலுக்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில், துணை ஆளுநர், முதல்வர் மோதலால், புதுச்சேரியில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 
– வணக்கம் இந்தியா

From around the web