கடன் கொடுப்பவர்களை நம்பவேண்டாம் – முதலமைச்சர்

கேரளா: கடன் கொடுக்க முன்வரும் நிதி நிறுவனங்களின் செயல்பாடுகளை மக்கள் ஆராய வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவுறுத்தியுள்ளார். இடுக்கி மாவட்டம் கட்டப்பனையில் நடந்த அகில இந்திய கூட்டுறவு வங்கிகளின் 66 ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட அவர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக கூட்டுறவு வங்கிகள் தாராளமாக கடனுதவி அளித்து வருவதாக தெரிவித்தார். அதே சமயம் தாமாக முன் வந்து கடன் வழங்கும் இதர நிதி நிறுவனங்களின் பின்னணி என்ன? அவற்றின்
 

கடன் கொடுப்பவர்களை நம்பவேண்டாம் – முதலமைச்சர்

கேரளா: கடன் கொடுக்க முன்வரும் நிதி நிறுவனங்களின் செயல்பாடுகளை மக்கள் ஆராய வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவுறுத்தியுள்ளார்.

இடுக்கி மாவட்டம் கட்டப்பனையில் நடந்த அகில இந்திய கூட்டுறவு வங்கிகளின் 66 ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட அவர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக கூட்டுறவு வங்கிகள் தாராளமாக கடனுதவி அளித்து வருவதாக தெரிவித்தார்.

அதே சமயம் தாமாக முன் வந்து கடன் வழங்கும் இதர நிதி நிறுவனங்களின் பின்னணி என்ன? அவற்றின் கடந்த கால செயல்பாடுகள் என்ன? என்பது பற்றி பொதுமக்கள் ஆராய வேண்டும் என கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் கேரள மின்வாரிய‌அமைச்சர் எம்.எம்.மணி, இடுக்கி எம்.பி. குரியாக்கோஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

https://www.A1TamilNews.com

From around the web