வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை அலுவலகத்தில் காஷ்மீர் பண்டிட்கள் ஆர்ப்பாட்டம்!

வாஷிங்டன்: அமெரிக்காவில் வசிக்கும் காஷ்மீர் பண்டிட்கள் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை அலுவலகத்திற்கு எதிராக திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார்கள். காஷ்மீரில் சட்டவிதி 370 மற்றும் 35 ஏ நீக்கப்பட்டப் பிறகு, காஷ்மீர் குறித்து வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கைகளில் வெளியாகி வரும் செய்திகளை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. இதை ஒருங்கிணைத்து நடத்திய மோகன் சப்ரு கூறுகையில், “ ஒரு தலைப்பட்சமான வாஷிங்டன் போஸ்ட் செய்திகளில், 370 மற்றும் 35 ஏ பிரிவுகளினால் பெண்கள் உள்பட சிறுபான்மையினருக்கு மறுக்கப்பட்ட ஜனநாயக
 

வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை அலுவலகத்தில் காஷ்மீர் பண்டிட்கள் ஆர்ப்பாட்டம்!

வாஷிங்டன்: அமெரிக்காவில் வசிக்கும் காஷ்மீர் பண்டிட்கள் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை அலுவலகத்திற்கு எதிராக திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார்கள். காஷ்மீரில் சட்டவிதி 370 மற்றும் 35 ஏ நீக்கப்பட்டப் பிறகு, காஷ்மீர் குறித்து வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கைகளில் வெளியாகி வரும் செய்திகளை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது.

இதை ஒருங்கிணைத்து நடத்திய மோகன் சப்ரு கூறுகையில், “ ஒரு தலைப்பட்சமான வாஷிங்டன் போஸ்ட் செய்திகளில், 370 மற்றும் 35 ஏ பிரிவுகளினால் பெண்கள் உள்பட சிறுபான்மையினருக்கு மறுக்கப்பட்ட ஜனநாயக உரிமைகள் பற்றி பேசப்படவில்லை.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஊழல் பெருக்கெடுத்து ஓடுகிறது. கற்பழிப்பு, கொலைகள் என மனித உரிமை மீறல்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மண்ணின் மைந்தர்களான காஷ்மீர் பண்டிட்களை அங்கிருந்து வெளியேற்றும் பணிகள் நடந்து வருகிறது

370 சட்டப்பிரிவை நீக்கியதன் மூலம், எல்லை தாண்டிய இஸ்லாமிய பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த முடியும். பெண்களுக்கான உரிமைகளை மீட்டெடுக்க முடியும். சிறுபான்மையினருக்கான நீதி கிடைக்கும். எல்லோருக்கும் சமமான பொருளாதார வாய்ப்புகள் கிடைக்கும்.  நாங்கள் முழுமையாக 370 மற்றும் 35 ஏ சட்டவிதி நீக்கத்தை ஆதரிக்கிறோம்,” என்று கூறினார்.

இந்திய அமெரிக்க காஷ்மீரிகளின் பன்னாட்டு ஒருங்கிணைப்பாளர் விஜய் சாசவால், “வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட மேல்நாட்டு பத்திரிக்கையாளர்கள் காஷ்மீர் விவகாரம் குறித்த அவர்களுடைய செய்திகளுக்கு வெட்கப்பட வேண்டும். காஷ்மீரில் சிறப்பு பிரிவுகளை நீக்கியதால் இஸ்லாம் தோற்றுவிட்டது, இந்துயிசம் வென்று விட்டது என்று எழுதுவது அவமானத்திற்குரியது, வெறுப்பூட்டுகிறது, உண்மைக்குப் புறம்பானது,” என்று கூறியுள்ளார்.

வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கைக்கு எதிராக காஷ்மீர் பண்டிட்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் அமெரிக்க தலைநகரப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

From around the web