“வன்ம அரசியலை முறியடிப்போம், மனிதம் காப்போம்” – கார்த்திகேய சிவசேனாபதி!

டெல்லியில் நடைபெற்ற ஒரு இஸ்லாமியக் கூட்டத்தில் பங்கேற்றவர்களால் தான் தமிழ்நாட்டுக்குள் கொரோனோ பரவுவது போல் சமூகத்தளங்களில் பரப்பப்பட்டு வந்தது. சுகாதாரத் துறைச் செயலாளர், டெல்லி கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தாமாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததையொட்டி இத்தகைய பிரச்சாரங்கள் வெகுவாக பரப்பப்பட்டது. தமிழ்நாட்டில் சிறு விழுக்காடு மக்கள் செய்யும் இத்தகைய வன்ம அரசியலை முறியடித்து, மனித குலத்தை கொரோனாவிடமிருந்து காப்போம் என்று சமூக ஆர்வலர் கார்த்திகேய சிவசேனாபதி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது,
 

“வன்ம அரசியலை முறியடிப்போம், மனிதம் காப்போம்” – கார்த்திகேய சிவசேனாபதி!டெல்லியில் நடைபெற்ற ஒரு இஸ்லாமியக் கூட்டத்தில் பங்கேற்றவர்களால் தான் தமிழ்நாட்டுக்குள் கொரோனோ பரவுவது போல் சமூகத்தளங்களில் பரப்பப்பட்டு வந்தது. சுகாதாரத் துறைச் செயலாளர், டெல்லி கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தாமாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததையொட்டி இத்தகைய பிரச்சாரங்கள் வெகுவாக பரப்பப்பட்டது.

தமிழ்நாட்டில் சிறு விழுக்காடு மக்கள் செய்யும் இத்தகைய வன்ம அரசியலை முறியடித்து, மனித குலத்தை கொரோனாவிடமிருந்து காப்போம் என்று சமூக ஆர்வலர் கார்த்திகேய சிவசேனாபதி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது,

“தமிழகத்தைச் சேர்ந்த சில இஸ்லாமியர்கள் டெல்லியால் நடந்த ஒரு மத வழிபாட்டில் பங்கு கொண்டு இருந்தனர் . அவர்களில் சிலருக்கு கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டு இருக்க வாய்ப்புள்ள காரணத்தினால் தமிழக அரசு மற்றும் தமிழக சுகாதாரத் துறைச் செயலர் திருமதி பீலா ராஜேஷ் அவர்கள் ஒரு வேண்டுகோள் விடுத்து இருந்தார்கள்.

அதனை முன்னிட்டு நிகழ்வில் பங்கு கொண்ட அனைவரும் முன்வந்து தங்களைப் பரிசோதித்துக் கொள்ளத் தமிழக அரசின் சுகாதாரத் துறைக்கு ஒத்துழைப்பு கொடுத்து உள்ளதாக இன்று திருமதி. பீலா ராஜேஷ் தெரிவித்து உள்ளார்கள்.

இதனைத் தேவையல்லாமல் இஸ்லாமியச் சகோதர, சகோதரியர்களுக்கு எதிரான வெறுப்பாக மாற்றச் சிலர் முயற்சி செய்து வருகின்றார்கள். அவர்களின் முயற்சி நிச்சயம் தமிழகத்தில் தோல்வியுறும்.

நம்மில் பலரும் அவர் அவர் குல தெய்வ கோவில்களின் திருவிழாவில் ஒன்று கூடுகின்றோம். வேளாங்கண்ணி, நாகர்கோவில், திருச்செந்தூர், திருப்பதி, பழனி , மதுரை மீனாட்சி அம்மன் கோவில்களுக்குச் செல்கின்றோம்.

அதே போல் வட இந்தியர்களும் கும்பமேளா, ஹரித்துவார், காசியிலே எனப் பல இடங்களில் கோடிக்கணக்கான மக்கள் ஒன்று கூடுகின்றார்கள். அதைப் போலவே இஸ்லாமியச் சகோதரர்களும் ஒன்று கூடி வருடம் ஒருமுறை தனிப்பட்ட ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் ஒன்று கூடுவது வழக்கம்.

இதில் தேவையற்ற அரசியல் செய்து, உலகிலேயே கொரோனா நோய்த் தொற்றை மத பிரச்சனையாக உருவாக்க முயற்சி செய்யும் ஒரே நாடு நமது நாடு தான். அதில் குறிப்பாகத் தமிழகத்திலே ஒரு சிறு விழுக்காடு மக்கள் வன்மம் நிறைந்த அரசியலைச் செய்வித்து வருகின்றனர்.

அதனை முறியடித்து கொரோனா நோய்த் தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாப்பது எவ்வாறு என்று காண்போம். நோய்த் தொற்றுக்கு, இஸ்லாமியரா. சைவமா, வைணவமா, சௌரமா, சக்தி மார்க்கமா, கணபதியமா, சனாதன தர்மமா, கிறித்துவமா, சமணரா, பௌத்தரா, மத நம்பிக்கையே அற்றவரா என எந்த கவலையும் கிடையாது.

எனவே தெளிவாக உணர்ந்து, மத அரசியலை இக்கட்டான இந்த நிலையிலும் தொடராமல்  இதனை மனித குலத்திற்கு நேர்ந்த ஆபத்து என உணர்ந்து செயல் ஆற்றுவோமாக. அன்பை விதைப்போம், மனிதம் காப்போம்,” என்று கார்த்திகேய சிவசேனாபதி அறிக்கையில் கூறியுள்ளார்.

A1TamilNews.com

From around the web