ஒரு சூரியன் ஒரு சந்திரன் ஒரு சூப்பர் ஸ்டார் – கலைப்புலி தாணு பெருமிதம்!

சென்னை :சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – இயக்குனர் ஷங்கரின் பிரம்மாண்டப் படைப்பான 2.0 விரைவில் திரைக்கு வருகிறது. வெளியீட்டுப் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. சத்யம் தியேட்டரில் நடந்த ட்ரெய்லர் வெளியீடு அகில இந்திய ஊடகங்களையும் கவர்ந்து இழுத்தது. ட்ரெய்லருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ்த் திரையுலகிலிருந்து, இந்தியாவைத் தாண்டி உலக சினிமாவின் பார்வையை திரும்பிப் பார்க்க வைக்கும் படைப்பாக 2.0 உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் பார்த்த தமிழ்த் திரையுலகின் முக்கியமானவரான கலைப்புலி தாணு
 
சென்னை :சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – இயக்குனர் ஷங்கரின் பிரம்மாண்டப் படைப்பான 2.0 விரைவில் திரைக்கு வருகிறது. வெளியீட்டுப் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.
 
சத்யம் தியேட்டரில் நடந்த ட்ரெய்லர் வெளியீடு அகில இந்திய ஊடகங்களையும் கவர்ந்து இழுத்தது. ட்ரெய்லருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ்த் திரையுலகிலிருந்து, இந்தியாவைத் தாண்டி உலக சினிமாவின் பார்வையை திரும்பிப் பார்க்க வைக்கும் படைப்பாக 2.0 உருவாகியுள்ளது.
 
இந்தப் படத்தின் ட்ரெய்லர் பார்த்த  தமிழ்த் திரையுலகின் முக்கியமானவரான கலைப்புலி தாணு 2.0 படத்தையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
 
“இது வரை வந்ததில்லை. இனியும் வரப்போவதில்லை. இது மாதிரி ட்ரெய்லர் என்று காண்ணுற்றோர் களிப்படைகின்றனர்.
 
ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரு சூப்பர் ஸ்டார்
 
We are proud to be witnessing the evaluation of Indian Cinema” என்று கலைப்புலி தாணு ட்வீட்டர் மூலம் பாராட்டியுள்ளார்.
https://twitter.com/theVcreations/status/1058683283473485825 
 
ஒரு சூரியன் ஒரு சந்திரன் ஒரு சூப்பர் ஸ்டார் – கலைப்புலி தாணு பெருமிதம்!
தமிழ் சினிமாவில் புதுமையாகவும் பிரம்மாண்டமாகவும் படங்களைத் தயாரித்து வெளியிட்டவர் கலைப்புலி தாணு ஆவார். சூப்பர் ஸ்டார் ரஜினியின் பைரவி படத்திற்கு முன்னரே வினியோகிஸ்தராக வெற்றி பெற்றவர். கருப்பு வெள்ளை படம் காலத்திலிருந்தே தமிழ் சினிமா வரலாற்றில் நீண்ட அனுபவம் கொண்ட கலைப்புலி தாணுவின் பாராட்டு முக்கியத்துவம் வாய்ந்தது.
 
2.0 உலக சினிமா ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் என்று நம்பலாம்.
 
– வணக்கம் இந்தியா 

From around the web