கலைஞர் கருணாநிதியியை அமைதியாக்கிய கவிஞர் நா.முத்துக்குமார்!

கவிஞர் நா.முத்துக்குமாரின் 45 வது பிறந்தநாளில், அவரைப் பற்றிய புதிய புதிய தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. கவிஞர் நா.முத்துக்குமார், யாரும் எதிர்பாராத தருணத்தில் இவ்வுலகை விட்டுச் சென்ற போது, மிகவும் துயரத்துடன் நீண்ட நேரம் அமைதியாக இருந்தார் கலைஞர் கருணாநிதி என்ற தகவலை, திமுக ஐடி பிரிவு மாநில துணைச் செயலாளர் புதுகை அப்துல்லா தெரிவித்துள்ளார். கவிஞர் நா.முத்துக்குமாரின் பிறந்த நாளை நினைவு கூர்ந்து அப்துல்லா குறிப்பிட்டுள்ளதாவது, “திராவிட முன்னேற்றக் கழகத்தின் கவிஞன் நா.முத்துக்குமாருக்கு இன்று அகவை
 

கலைஞர் கருணாநிதியியை அமைதியாக்கிய கவிஞர் நா.முத்துக்குமார்!கவிஞர் நா.முத்துக்குமாரின் 45 வது பிறந்தநாளில், அவரைப் பற்றிய புதிய புதிய தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

கவிஞர் நா.முத்துக்குமார், யாரும் எதிர்பாராத தருணத்தில் இவ்வுலகை விட்டுச் சென்ற போது, மிகவும் துயரத்துடன் நீண்ட நேரம் அமைதியாக இருந்தார் கலைஞர் கருணாநிதி என்ற தகவலை, திமுக ஐடி பிரிவு மாநில துணைச் செயலாளர் புதுகை அப்துல்லா தெரிவித்துள்ளார்.

கவிஞர் நா.முத்துக்குமாரின் பிறந்த நாளை நினைவு கூர்ந்து அப்துல்லா குறிப்பிட்டுள்ளதாவது,

“திராவிட முன்னேற்றக் கழகத்தின் கவிஞன் நா.முத்துக்குமாருக்கு இன்று அகவை 45. கலைஞரின் காதலனாய் கடைசி வரை தடம் மாறாமல் வாழ்ந்தவன்!

அவனது இறப்புச் செய்தி கேட்டு வெகு நேரம் தலைவர் கலைஞர் அமைதியாய் இருந்ததாய் தலைவரின் உதவியாளர் சண்முகநாதன் ஐயா சொல்வார்.

பெயர் சொல்ல விரும்பவில்லை.. சில பேர் தலைவர் மீது பிரியமானவர்கள் போல காட்டிக்கொண்டு தலைவரை நெருங்கி அதை வைத்து பல்வேறு வகையில் பலன் பெற்றனர்.

ஆனால் கட்சி கவியரங்க மேடைகளில் பார்ப்பதைத் தவிர வேறு எப்போதும் எதற்காகவும் தலைவரிடம் செல்லாமல் தலைவர் கலைஞர் மீது ஒரு “unconditional love ” வோடு வாழ்ந்த அப்பழுக்கற்ற கட்சிக்காரன். கலைஞருக்கும் முன்பு கிளம்பி மரணத்தில் அவரையே ஜெயித்தவன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

5 தடவை தமிழக முதலமைச்சராக கலைஞர் கருணாநிதியின் தீராத அன்பைப் பெற்ற போதும், அவரிடம் தனக்காக எந்த ஒரு கோரிக்கையையும் முன் வைத்ததும் இல்லை,  எதிர்பார்த்ததில்லை என்று கவிஞர் நா.முத்துக்குமார் பற்றி திமுக முன்னணித் தலைவர் ஒருவர் கூறியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

பொதுவெளியில் கலைஞர் கருணாநிதியுடன் மிகவும் நெருக்கமானவராக அறியப்பட்டவர் கவிஞர் வைரமுத்து என்பது குறிப்பிடத்தக்கது.

A1TamilNews.com

 

From around the web