கடாரம் கொண்டான் – விமர்சனம்

நடிகர்கள்: விக்ரம், அபி ஹாஸன், அக்ஷரா ஹாஸன் ஒளிப்பதிவு: ஸ்ரீனிவாஸ் குத்தா இசை: ஜிப்ரான் தயாரிப்பு: ராஜ்கமல் இன்டர்நேஷனல் இயக்கம்: ராஜேஷ் எம் செல்வா அதென்ன கடாரம் கொண்டான்? கடாரம் என்பது மலேசியாவின் ஒரு பகுதி. பழங்காலத்தில் மலேசியாவின் பெயரும் கடாரம்தான். இந்தப் படம் முழுக்க கடாரம் அதாவது மலேசியாவில் நடக்கிறது. இப்போது படத்தின் தலைப்புக்கு அர்த்தம் விளங்கியிருக்கும். மலேசியாவில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து தப்பித்து விபத்தில் சிக்கும் கொள்ளைக்காரரான விக்ரம், ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். அந்த
 

கடாரம் கொண்டான் – விமர்சனம்டிகர்கள்: விக்ரம், அபி ஹாஸன், அக்ஷரா ஹாஸன்

ஒளிப்பதிவு: ஸ்ரீனிவாஸ் குத்தா

இசை: ஜிப்ரான்

தயாரிப்பு: ராஜ்கமல் இன்டர்நேஷனல்

இயக்கம்: ராஜேஷ் எம் செல்வா

அதென்ன கடாரம் கொண்டான்? கடாரம் என்பது மலேசியாவின் ஒரு பகுதி. பழங்காலத்தில் மலேசியாவின் பெயரும் கடாரம்தான். இந்தப் படம் முழுக்க கடாரம் அதாவது மலேசியாவில் நடக்கிறது. இப்போது படத்தின் தலைப்புக்கு அர்த்தம் விளங்கியிருக்கும்.

மலேசியாவில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து தப்பித்து விபத்தில் சிக்கும் கொள்ளைக்காரரான விக்ரம், ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். அந்த மருத்துவமனையில்தான் அபி ஹாஸன் நர்சாக வேலைப் பார்க்கிறார். அவர் மனைவி அக்ஷரா. நிறைமாத கர்ப்பிணி. வீட்டில் தனியாக இருக்கிறார். மருத்துவமனையில் விக்ரமை கொல்ல முயற்சி நடக்கிறது, அதிலிருந்து விக்ரமை காப்பாற்றுகிறார் அபி. ஒரு நாள் அக்ஷராவை கடத்தும் சிலர், விக்ரமை தப்பிக்க வைத்தால்தான் அக்ஷராவை விடுவிப்போம் என நிபந்தனை வைக்கிறார்கள். விக்ரமை தப்பிக்க வைத்தாரா அபி… அக்ஷரா காப்பாற்றப்பட்டாரா என்பதெல்லாம் மீதி.

நாசர் மகன் அபி ஹாஸனை ஹீரோவாக புரமோட் செய்வதற்காகவே எடுக்கப்பட்ட ஒரு படத்தில் விக்ரம் கெஸ்ட் ரோல் செய்திருப்பது போல இருக்கிறது கடாரம் கொண்டான். காட்சி அமைப்பு, சண்டைக் காட்சிகளில் பளபளக்கும் படம், திரைக்கதையில்தான் பல்லிளிக்கிறது, விக்ரம் யார், அவர் பின்னணி என்னவென்பதையெல்லாம் முதலிலேயே சொல்லியிருந்தால் அந்தப் பாத்திரத்தோடு ஒன்றியிருக்க முடியும்.

கடந்த படம் வரை இளம் நாயகிகளுடன் டூயட் பாடிக் கொண்டிருந்த விக்ரம் ஒருவழியாக சால்ட் அன்ட் பெப்பர் லுக்குக்கு வந்திருக்கிறார். அவரது தோற்றம், அதிகம் பேசாத நடிப்பு எல்லாமே நன்றாக இருக்கிறது. ஆனால் அந்தப் பாத்திரம் முழுமையாக இல்லை என்பதுதான் குறை.

நாசர் மகன் அபி ஹாஸனுக்கு பெரிய விசிட்டிங் கார்டு இந்தப் படம். கொடுத்த வேடத்தை நன்றாகவே செய்திருக்கிறார், நிறைமாத கர்ப்பிணியாக வரும் அக்ஷராவுக்கு சின்ன வேடம்தான். ஆனாலுமி நிறைவாக நடித்திருக்கிறார்.

ஜிப்ரானின் பின்னணி இசையும், ஸ்ரீனிவாச குத்தாவின் ஒளிப்பதிவும் படத்துக்கு பலம். ஆனால் ராஜேஷ் எம் செல்வாவின் பலவீனமான திரைக்கதை படத்தின் விறுவிறுப்புக்கு பெரிய ஸ்பீட்பிரேக்கர். பெரிய பேனர், பிரமாதமான ஹீரோ என எல்லாம் கிடைத்தும் ஒரு வெப் சீரிஸ் மாதிரி படத்தை எடுத்து வைத்திருக்கிறார் இயக்குநர்.

மதிப்பீடு: 2.5/5.0

 

From around the web