அரிசிராஜாவை பிடிக்கப்போகும் கபில்தேவ்!

கோவை: பொள்ளாச்சி அருகே அர்த்தநாரிபாளையத்தில் காட்டு யானை அரிசிராஜாவை பிடிக்கும் பணியில் மூன்றாவது நாளாக வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை வனத்துக்குள் இருந்து வெளியே வந்த அரிசிராஜா ஒருவரை மிதித்துக் கொன்றது. இதனையடுத்து யானையைப் பிடித்து வரகழியாறு முகாமுக்கு கொண்டு செல்லும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். திங்கள்கிழமை காலை காட்டுக்குள் இருந்து வெளியே வந்த அரிசிராஜா, வனத்துறையினரைக் கண்டதும் உள்ளே ஓடிவிட்டது. காட்டுக்குள் அது இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க வனத்துறை மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்த
 

அரிசிராஜாவை பிடிக்கப்போகும் கபில்தேவ்!கோவை: பொள்ளாச்சி அருகே அர்த்தநாரிபாளையத்தில் காட்டு யானை அரிசிராஜாவை பிடிக்கும் பணியில் மூன்றாவது நாளாக வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை வனத்துக்குள் இருந்து வெளியே வந்த அரிசிராஜா ஒருவரை மிதித்துக் கொன்றது. இதனையடுத்து யானையைப் பிடித்து வரகழியாறு முகாமுக்கு கொண்டு செல்லும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். திங்கள்கிழமை காலை காட்டுக்குள் இருந்து வெளியே வந்த அரிசிராஜா, வனத்துறையினரைக் கண்டதும் உள்ளே ஓடிவிட்டது.

காட்டுக்குள் அது இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க வனத்துறை மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் செவ்வாய்கிழமை இரவு ஆண்டியூர் அருகே உள்ள தோட்டம் ஒன்றுக்குள் அரிசிராஜா புகுந்தது. தகவலறிந்து வனத்துறையினர் அங்கு செல்வதற்குள் தோட்ட உரிமையாளர் பட்டாசு வெடித்ததால் அரிசிராஜா அங்கிருந்து சென்றுவிட்டது.

மீண்டும் இன்று அதிகாலை சுரிகுடிப்பள்ளம் என்னுமிடத்துக்கு வந்த அரிசிராஜாவை வேட்டைத் தடுப்புக் காவலர்கள் பார்த்துள்ளனர். ஆனால் கால்நடை மருத்துவக்குழு அங்கு செல்வதற்குள் யானை தப்பிவிட்டது. அரிசிராஜாவை பிடிப்பதற்காக மயக்க ஊசி மற்றும் கபில்தேவ், கலீம் ஆகிய இரண்டு கும்கி யானைகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.

https://www.A1TamilNews.com

From around the web