காளி – விமர்சனம் #KaaliReview

நடிகர்கள்: விஜய் ஆண்டனி, சுனைனா, அஞ்சலி, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா, யோகி பாபு இசை: விஜய் ஆண்டனி ஒளிப்பதிவு: ரிச்சர்ட் எம் நாதன் இயக்குநர்: கிருத்திகா உதயநிதி நடிகர் ராமராஜனுக்கு அடுத்தபடியாக அம்மா பாசத்தை வைத்து அதிகப்படியான படத்தில் நடித்து வருபவர் விஜய் ஆண்டனி. அமெரிக்காவில் மிகப்பெரிய மருத்துவமனையின் ஓனராக மட்டுமல்லாமல் நம்பர் ஒன் டாக்டராக வருகிறார் விஜய் ஆண்டனி. அவரது கனவில் பாம்பு ஒன்றும், காளை ஒன்றும் அடிக்கடி வருகின்றன. ஒரு கட்டத்தில், தான் ஒரு
 

காளி – விமர்சனம் #KaaliReview

நடிகர்கள்: விஜய் ஆண்டனி, சுனைனா, அஞ்சலி, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா, யோகி பாபு

இசை: விஜய் ஆண்டனி

ஒளிப்பதிவு: ரிச்சர்ட் எம் நாதன்

இயக்குநர்: கிருத்திகா உதயநிதி

டிகர் ராமராஜனுக்கு அடுத்தபடியாக அம்மா பாசத்தை வைத்து அதிகப்படியான படத்தில் நடித்து வருபவர் விஜய் ஆண்டனி.

அமெரிக்காவில் மிகப்பெரிய மருத்துவமனையின் ஓனராக மட்டுமல்லாமல் நம்பர் ஒன் டாக்டராக வருகிறார் விஜய் ஆண்டனி. அவரது கனவில் பாம்பு ஒன்றும், காளை ஒன்றும் அடிக்கடி வருகின்றன. ஒரு கட்டத்தில், தான் ஒரு வளர்ப்பு மகன் என தெரிய வர, தன் தாய் யார் என்பதை கண்டுபிடிக்கவும், கனவில் வருவதைப் பற்றி அறிந்து கொள்ளவும் இந்தியா வருகிறார் விஜய் ஆண்டனி.

இந்தியா வந்ததும் தன் தாய் இறந்து விட்டதாக அறிகிறார். ஆனால், தந்தை உயிருடன் இருப்பதை அறிந்த விஜய் ஆண்டனி, அவரைத் தேடி அலைகிறார்.

விஜய் ஆன்டனி தனது தந்தை யார் என்பதை கண்டுபிடிக்கும் இந்த ஒரு தேடுதல் வேட்டைதான் இந்த காளியின் வேட்டை…

தனக்கு ஏற்ற கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்துள்ளார் விஜய் ஆண்டனி. இயல்பான, அமைதியான, ஆக்ரோஷமான, கலாட்டாவான ஒரு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் விஜய் ஆண்டனி.

படத்தில் மூன்று பாகமாக கதை வெளிவருகிறது. மூன்று பாகத்தில் ஒரு கதை மட்டுமே படத்தின் கதையோடு சம்மந்தப்பட்டு வருவதால் அதை மட்டுமே ரசிக்க முடிகிறது.

மற்ற இரண்டு பாகமும் ஏன்தான் வருகின்றன என்ற எரிச்சல் எட்டிப் பார்ப்பதை சொல்லாமலிருக்க முடியவில்லை. யோகி பாபு இல்லை என்றால் முதல் பாதியை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அவரது காமெடி மட்டுமே கைகொடுத்து படத்தை நகர வைக்கிறது.

இசையில் அரும்பே பாடல் ரிப்பீட் மோட், பின்னனி இசை சுமார் ரகம்.

இரண்டு பெரிய சண்டைக்காட்சிகள் அதிர வைக்கின்றன. ரிச்சர்ட் ஒளிப்பதிவு கலர்புல்.

‘காளி’ – விஜய் ஆண்டனி மீதான எதிர்பார்ப்பு ‘காலி’!

Rating: 2.5/5.0

From around the web