பதவியேற்ற 100 நாட்களில் “காத்திருப்போர்களுக்கு க்ரீன்கார்டு” ! அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் வாக்குறுதி!

நவம்பர் 3ம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில், தற்போதைய அதிபர் ட்ரம்ப்-ஐ எதிர்த்து ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக முன்னாள் அதிபர் ஒபாமாவுடன், துணை அதிபராக 8 ஆண்டுகள் பதவி வகித்த ஜோ பைடன் போட்டியிடுகிறார். அதிபராக பதவியேற்ற 100 நாட்களுக்குள், க்ரீன்கார்டுக்காக காத்திருப்போர் பட்டியலில் உள்ள அனைவருக்கும் க்ரீன்கார்டு கிடைப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்பேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார் ஜோ பைடன். ஆசிய அமெரிக்கர்கள் மற்றும் பசிபிக் தீவுகள் அமெரிக்கர்களுடனான கூட்டத்தில் நேரலையில் பேசிய ஜோ
 

பதவியேற்ற 100 நாட்களில் “காத்திருப்போர்களுக்கு க்ரீன்கார்டு” ! அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் வாக்குறுதி!வம்பர் 3ம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில், தற்போதைய அதிபர் ட்ரம்ப்-ஐ எதிர்த்து ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக முன்னாள் அதிபர் ஒபாமாவுடன், துணை அதிபராக 8 ஆண்டுகள் பதவி வகித்த ஜோ பைடன் போட்டியிடுகிறார்.

அதிபராக பதவியேற்ற 100 நாட்களுக்குள், க்ரீன்கார்டுக்காக காத்திருப்போர் பட்டியலில் உள்ள அனைவருக்கும் க்ரீன்கார்டு கிடைப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்பேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார் ஜோ பைடன்.

ஆசிய அமெரிக்கர்கள் மற்றும் பசிபிக் தீவுகள் அமெரிக்கர்களுடனான கூட்டத்தில் நேரலையில் பேசிய  ஜோ பைடன், க்ரீன்கார்டுக்கான நடைமுறைகளை நெறிப்படுத்தி, விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு விரைவில் க்ரீன்கார்டு கிடைக்க வாய்ப்பு ஏற்படும். தற்போது சுமார் ஆறரை லட்சம் இந்தியர்கள் அமெரிக்காவில் க்ரீன்கார்டுக்காக ஆண்டுக் கணக்கில் காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

இர்களில் பெரும்பான்மையானோர்ஹெச்1 பி  விசாவில், ஏற்கனவே அமெரிக்காவில் பணியாற்றி வருபவர்கள் மற்றும் அவர்களுடைய மனைவி, குழந்தைகள் ஆவார்கள். அதிபர் ட்ரம்ப் விசாக் கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ள நிலையில், அதிக எண்ணிக்கையிலான இந்தியர்களுக்கு ஹெச்1 விசா மறுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஜோ பைடனின் தேர்தல் வாக்குறுதி, இந்தியர்களுக்கு நம்பிக்கை தருவதாக உள்ளது. அமெரிக்காவில் இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர் பொதுவாக ஜனநாயக்கட்சி ஆதரவாளர்களாகவே இருந்து வருகிறார்கள். இந் நிலையில், பிரதமர் மோடியின் ஆதரவு இந்துத்துவாவதிகள், அமெரிக்க இந்துக்களை அதிபர் ட்ரம்ப்-பின் குடியரசுக் கட்சிக்கு ஆதரவாக திரட்டும் முயற்சியில் வெளிப்படையாகவே ஈடுபட்டு வருவது தெரிகிறது.

அமெரிக்க இந்தியர்களின் வாக்கு சதவீதம் மிகவும் குறைவு என்றாலும், இந்தியர்கள், இந்திய வம்சாவளியினரின் தேர்தல் நிதி அளிக்கும் சக்தியும் முக்கியப் பங்காற்றுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

A1TamilNews.com

 

From around the web