ரூ.98 பிளானை நீக்கியது ஜியோ! இனி ரூ.129 முதல் அசத்தல் ரீசார்ஜ் பிளான்கள்!

தொலைத் தொடர்புத் துறையில் குறுகிய காலத்திலேயே அதிக வாடிக்கையாளர்களைப் பெற்றிருக்கும் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ. வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள அவ்வப்போது அதிரடி ஆபர்களை அறிவித்துக் கொண்டிருப்பதில் ஜியோவிற்கு நிகரில்லை என்பது ஏகோபித்த பயனர்களின் கருத்து. ஆனால் தற்போது சிறிது, சிறிதாக சலுகைகளை குறைத்து வருகிறது. ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த ஜியோ ரூ.98 ல் 28 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்கி வந்தது. இதனுடன் 2 ஜிபி டேட்டா மற்றும் ஜியோ டூ ஜியோ இலவச அழைப்புகள் என
 

ரூ.98 பிளானை நீக்கியது ஜியோ! இனி ரூ.129 முதல் அசத்தல் ரீசார்ஜ் பிளான்கள்!தொலைத் தொடர்புத் துறையில் குறுகிய காலத்திலேயே அதிக வாடிக்கையாளர்களைப் பெற்றிருக்கும் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ. வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள அவ்வப்போது அதிரடி ஆபர்களை அறிவித்துக் கொண்டிருப்பதில் ஜியோவிற்கு நிகரில்லை என்பது ஏகோபித்த பயனர்களின் கருத்து.

ஆனால் தற்போது சிறிது, சிறிதாக சலுகைகளை குறைத்து வருகிறது. ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த ஜியோ ரூ.98 ல் 28 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்கி வந்தது. இதனுடன் 2 ஜிபி டேட்டா மற்றும் ஜியோ டூ ஜியோ இலவச அழைப்புகள் என மற்ற நெட்வொர்க்குகளுக்கு சவால் விடும் வகையில் இருந்து வந்தது.

ரூ98க்கு பிளானை அப்படியே ரூ.129ஆக உயர்த்தியுள்ளது. அதே போல் 28 நாட்கள் வேலிடிட்டி , 2 ஜிபி டேட்டா மற்றும் ஜியோ டூ ஜியோ அழைப்புகள் இலவசம், மற்ற மொபைல் நெட்வொர்க்களுக்கு 1000 நிமிடங்கள் ஆஃபரும் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

A1TamilNews.com

From around the web