சிறு, குறு  நிறுவனங்களுக்கு ரூபாய் 20,000 கோடி ஒதுக்கீடு! நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ.10,000 கடன்! மத்திய மந்திரி அறிவிப்பு!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கால் இந்தியாவின் பொருளாதாரம் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இழந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் தற்சார்பு பொருளாதாரத்தை அதிகரிக்க வேண்டும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். மேலும் 2லட்சம் கோடி ரூபாய் திட்டங்களும் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில் இந்தியாவில் உள்ள அனைத்து சிறு,குறு, நடுத்தர நிறுவனங்களை மேம்படுத்தும் வகையில் ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். அதன்படி ரூ.50 லட்சத்துக்கும் குறைவாக வியாபாரம் செய்பவர்களுக்கு
 

சிறு, குறு  நிறுவனங்களுக்கு ரூபாய் 20,000 கோடி ஒதுக்கீடு! நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ.10,000 கடன்! மத்திய மந்திரி அறிவிப்பு!கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கால் இந்தியாவின் பொருளாதாரம் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இழந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் தற்சார்பு பொருளாதாரத்தை அதிகரிக்க வேண்டும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். மேலும் 2லட்சம் கோடி ரூபாய் திட்டங்களும் அறிவிக்கப்பட்டன.

அந்த வகையில் இந்தியாவில் உள்ள அனைத்து சிறு,குறு, நடுத்தர  நிறுவனங்களை மேம்படுத்தும் வகையில் ரூ.20 ஆயிரம் கோடி  ஒதுக்கப்பட்டுள்ளதாக  பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.

 அதன்படி ரூ.50 லட்சத்துக்கும் குறைவாக வியாபாரம் செய்பவர்களுக்கு நிவாரணம் மற்றும் ஊக்குவிக்கும் பொருட்டு கடனுதவி வழங்கப்படும். மேலும் நடைபாதையில் கடை வைத்திருக்கும் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10,000 கடன் உதவி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சிறு,குறு, நடுத்தர நிறுவனங்கள் பங்கு சந்தையிலும் சிறப்பான இடத்தைப் பிடிக்க முடியும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

A1TamilNews.com

From around the web