குற்றவாளிகளை விட்டு விடக் கூடாது! எப்படிப்பட்ட கொம்பனாக இருந்தாலும்!!

1989ல் ஆர்.எஸ்.எஸ். தொடங்கிய கிளை அமைப்பு சேவாபாரதி எப்படி மத்திய பாஜக ஆட்சியில் #friendsofpolice ஆனார்கள் என் இன்று பத்திரிகை மட்டுமல்ல திமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சியனரும் கேக்க தொடங்கி உள்ள்னரே … ரத்தம் வர வர அடித்தே கொல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் ரத்த உறுவினர்கள் அளித்த பேட்டியில் மட்டுமல்ல அவர்களின் புகாரின் சேவாபாரதி friendsofpolice குழுவினரும் சேர்ந்தே அடித்தார்கள் என கூறியுள்ளது முக்கியம் பெறுவதையும் யாவருமே காணலாம் .. மேலும் சாத்தான்குளம் ரெட்டை கொலையே சிறு விஷயம் என
 

குற்றவாளிகளை விட்டு விடக் கூடாது! எப்படிப்பட்ட கொம்பனாக இருந்தாலும்!!1989ல் ஆர்.எஸ்.எஸ். தொடங்கிய கிளை அமைப்பு சேவாபாரதி எப்படி மத்திய பாஜக ஆட்சியில் #friendsofpolice ஆனார்கள் என் இன்று பத்திரிகை மட்டுமல்ல திமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சியனரும் கேக்க தொடங்கி உள்ள்னரே …

ரத்தம் வர வர அடித்தே கொல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் ரத்த உறுவினர்கள் அளித்த பேட்டியில் மட்டுமல்ல அவர்களின் புகாரின் சேவாபாரதி friendsofpolice குழுவினரும் சேர்ந்தே அடித்தார்கள் என கூறியுள்ளது முக்கியம் பெறுவதையும் யாவருமே காணலாம் ..

மேலும் சாத்தான்குளம் ரெட்டை கொலையே சிறு விஷயம் என பாஜக தமிழக தலைவர் முருகன் பேசிய போது அதில் சேவாபாரதி வண்டவாளம் தண்டவாள்த்திலே ஒடியதை யாவருமே காணலாம் ..

இது மட்டுமல்ல எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று எழுப்பிய கேள்வியை உற்று நோக்கினால் அதில் உள்ள ஒப்புக்குக் கணக்குக் காட்டுவது என்பது அது ஆர்எஸ்எஸ் தொடங்கிய கிளைஅமைப்பு சேவாபாரதியும் கைகாட்டுகிறது என்பதையும் யாவருமே காணலாம்.

எச் ராஜா ஷர்மாக்கள் குடுமி தேவையில்லாமல் குதிக்கும் போதே சந்தேகம் வந்ததால் 27ஆம் தேதியே need to probe the role of rss in seva Bharathi என நாம் எழுதிய அடித்துக் கொன்றது போலீசா ? RSS ஆ? பதிவில் யாவருமே காணலாம்.

இப்படி பல்வேறு வழியில் சிக்கி கொண்ட 1989ல் ஆர்எஸ்எஸ் தொடங்கிய கிளைஅமைப்பு சேவாபாரதிக்கு ஏன் தமிழக காவல் துறை வெண்சாமரம் வீசியது என்ற கோணத்தில் ஆய்வை தொடங்கினால், வலி தாங்கமால் சிந்தப்பட்ட ரத்தத்தின் நாம் கோரும்   #JusticeforJayarajAndFenix வலிகளின் ஓலத்தின் தொடுகளம் நாக்பூரின் RSS தலைமை பீடத்தின் வலிமையான தலையாம் மோகன் பகவத் கூட தொடலாம் என்பதையுமே யாவருமே காணலாம்.

உயர் நீதி மன்றம் செயலபாட்டில் ஆட்டம் கண்ட ஆளும் அதிமுக மற்றும் அதை ஆதரிக்கும் பாஜக இருவரும் வேறு வழியின்றி தங்களின் காவலதுறையினர் மீதே கொலை வழக்கு பதிவு செய்து 5 காவலரை கைது செய்ய வைத்த நீதித்துறைக்கு ஆயிரம் நன்றிகள்.

உண்மையை தேடி போராடும் சமூக தளத்துக்கும் நன்றிகள் ஆயிரம். குற்றவாளிகளை விட்டு விடக் கூடாது அவன் எப்படிப்பட்ட கொம்பனாக இருந்தாலும்!

– வெங்கட் ராமானுஜம்

A1TamilNews.com

From around the web