கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்குமா அமெரிக்கா?

உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தி வரும் கொரோனா வைரசுக்கு அமெரிக்க தேசிய சுகாதாரத் துறை தடுப்பு மருந்தை கண்டுபிடித்து உள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. வாஷிங்டன் மாகாணத்தின் சியாட்டின் நகரில் அமெரிக்காவின் தேசிய சுகாதாரத்துறை நிறுவனத்தில் ஆய்வு தொடங்கப்பட்டு மருந்து கண்டறியப்பட்டுள்ளது. தற்போது மருந்தை பரிசோதிக்க நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக 43 வயதான ஜெனிஃபர் ஹெலர் என்ற பெண்ணுக்கு தடுப்பு மருந்து உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. ஜெனிஃபரை தொடர்ந்து 18 முதல் 55 வயதுள்ள மொத்தம் 45
 

கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்குமா அமெரிக்கா?

லக நாடுகளை பீதியில் ஆழ்த்தி வரும் கொரோனா வைரசுக்கு அமெரிக்க தேசிய சுகாதாரத் துறை தடுப்பு மருந்தை கண்டுபிடித்து உள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

வாஷிங்டன் மாகாணத்தின் சியாட்டின் நகரில் அமெரிக்காவின் தேசிய சுகாதாரத்துறை நிறுவனத்தில் ஆய்வு தொடங்கப்பட்டு மருந்து கண்டறியப்பட்டுள்ளது. தற்போது மருந்தை பரிசோதிக்க நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக 43 வயதான ஜெனிஃபர் ஹெலர் என்ற பெண்ணுக்கு தடுப்பு மருந்து உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

ஜெனிஃபரை தொடர்ந்து 18 முதல் 55 வயதுள்ள மொத்தம் 45 பேருக்கு தடுப்பு மருந்து பரிசோதனை நடத்தப்படுகிறது. இந்த 45 பேரிடமும் மொத்தம் 6 வாரங்கள் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து பரிசோதனை நடத்தப்பட்டு இருக்கிறது.

படிப்படியான முன்னேற்றம் தெரிவதாக அறிக்கைகள் அறிவிக்கின்றன். 6 வாரங்கள் முடிந்த நிலையில் தடுப்பு மருந்து உறுதி செய்யப்படும் எனத் தெரிகிறது. இருந்தாலும் இந்த மருந்து மக்களின் பயன்பாட்டிற்கு வருவதற்கு ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரையிலான காலம் ஆகும் என்று கூறப்படுகிறது.

http://www.A1TamilNews.com

From around the web