இரவுக்கு ஆயிரம் கண்கள் விமர்சனம்

நடிகர் அருள்நிதி ஒரு கால் டாக்சி டிரைவர். இவருக்கும் படத்தின் நாயகி மஹிமாவிற்கும் காதல். இவர்களின் காதலுக்கு குறுக்கே அணை போடுகிறார் அஜ்மல். மஹிமாவை அடைய எண்ணி அருள்நிதியின் பகையை சம்பாதிக்கிறார் அஜ்மல். மேலும், ஜான் விஜய் – சாயாசிங் வாழ்க்கையிலும் ஒரு விபரீதத்தை உண்டுபண்ணுகிறார் அஜ்மல். இந்நிலையில், அஜ்மலின் தோழியாக வரும் சுஜா வருணி சுட்டுக் கொல்லப்படுகிறார். அருள்நிதிதான் இந்த கொலையை செய்தார் என போலீஸ் ஒருபுறம் வலைவீசி தேட, அஜ்மலைத் தேடி அருள்நிதி ஓட,
 

இரவுக்கு ஆயிரம் கண்கள் விமர்சனம்

நடிகர் அருள்நிதி ஒரு கால் டாக்சி டிரைவர். இவருக்கும் படத்தின் நாயகி மஹிமாவிற்கும் காதல். இவர்களின் காதலுக்கு குறுக்கே அணை போடுகிறார் அஜ்மல். மஹிமாவை அடைய எண்ணி அருள்நிதியின் பகையை சம்பாதிக்கிறார் அஜ்மல்.

மேலும், ஜான் விஜய் – சாயாசிங் வாழ்க்கையிலும் ஒரு விபரீதத்தை உண்டுபண்ணுகிறார் அஜ்மல். இந்நிலையில், அஜ்மலின் தோழியாக வரும் சுஜா வருணி சுட்டுக் கொல்லப்படுகிறார்.

அருள்நிதிதான் இந்த கொலையை செய்தார் என போலீஸ் ஒருபுறம் வலைவீசி தேட, அஜ்மலைத் தேடி அருள்நிதி ஓட, படத்தில் காட்சிக்கு காட்சி ஓட்டம் பிடிக்க, கடைசியாக யார் சுஜா வருணியை கொலை செய்தார்..?? அருள்நிதி இவ்வழக்கில் இருந்து தப்பித்தாரா…??? என்பதே படத்தின் மீதிக் கதை.

சஸ்பெண்ஸ் த்ரில்லர் கதைக்கு மட்டுமே அருள்நிதி ஏற்றாற்போல இருப்பார்போல.. அப்படி ஒரு சைலண்ட் நாயகனாக மட்டுமல்ல அதிரடி நாயகனாகவும் வந்து செல்கிறார். தனது காதலிக்கு அவர் எடுத்து வைக்கும் ரிஸ்க் அசாத்தியமானது.

குற்றம் 23 படத்திற்கு பிறகு மேலும் மெருகேறியிருக்கிறார் மஹிமா நம்பியார். நடிப்பிலும் அடுத்த கட்டத்திற்கு சென்றிருக்கிறார்.

அஜ்மல், வில்லனாக நடித்திருக்கிறார். என்னதான் தனது குரலை ஏற்றி ஏற்றி நடித்தாலும், வில்லத்தனத்திற்கு ஏற்ற ஒன்றை அவர் இன்னமும் மிஸ் செய்துதான் வருகிறார். (லவ் பண்ற ஃபேஸ்பா உனக்கு)

படத்தின் ஆரம்பம் முதலே கதைக்கு செல்வது பலம் தான். இந்த இடத்தில் ட்விஸ்ட் வேண்டும், அந்த இடத்தில் ட்விஸ்ட் வேண்டும் என்று தேடி தேடி சென்று ட்விஸ்ட் வைத்தாலும் சற்றும் கண் இமைக்காமல் கதையை நகர்த்திருக்கிறா இயக்குனர் மாறன்.

படம் முழுவதும் ப்ளாஷ் பேக் காட்சிகள் என்பதால் மட்டுமே சற்று சலிப்படைய வைத்திருக்கிறது. மற்றபடி, படத்தின் ஓட்டம் அற்புதம்.

சாம் சி எஸ்-சின் இசையில் பின்னனியில் மிரட்டல்

அரவிந்த் சிங்-கின் கேமாரா இரவு நேரத்தில் ஆயிரம் கண்களையும் படமெடுத்திருக்கிறது.

இரவுக்கு ஆயிரம் கண்கள் – ஆயிரம் கண்களின் மிரட்டலை மிரளாமல் பார்க்கலாம்…

From around the web