ஐபிஎல் இன்று: மும்பை இந்தியன்ஸை அசால்டாக வென்ற பஞ்சாப்!

மொஹாலி: 12-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இன்று மாலை மொஹாலியில் நடைபெற்ற ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் ரோகித் சர்மாவும், குயிண்டன் டி காக்கும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அடித்து ஆடினர். இதனால்
 

ஐபிஎல் இன்று: மும்பை இந்தியன்ஸை அசால்டாக வென்ற பஞ்சாப்!

மொஹாலி: 12-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இன்று மாலை மொஹாலியில் நடைபெற்ற ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் ரோகித் சர்மாவும், குயிண்டன் டி காக்கும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

இருவரும் தொடக்கம் முதலே அடித்து ஆடினர். இதனால் மும்பை அணி 5 ஓவரில் 50 ரன்னை தொட்டது. அணியின் எண்ணிக்கை 51 ஆக இருக்கும்போது ரோகித் சர்மா 19 பந்தில் 5 பவுண்டரியுடன் 32 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய சூர்யகுமார் யாதவ் 11 ரன்னில் வெளியேறினார்.

மறுபுறம் பொறுப்பாக ஆடிய டி காக் அரை சதமடித்தார். அவர் 39 பந்தில் 2 சிக்சர், 6 பவுண்டரியுடன் 60 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து இறங்கிய யுவராஜ் சிங், 18 ரன்னில் அவுட்டானார்.

அவரை தொடர்ந்து பொலார்டு 7 ரன்னிலும், குருணால் பாண்டியா 10 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசியில் ஹர்திக் பாண்டியா 19 பந்தில் ஒரு சிக்சர், 3 பவுண்டரியுடன் 31 ரன்னில் அவுட்டானார்.

இறுதியில், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்களை எடுத்துள்ளது.

பஞ்சாப் அணி சார்பில் முருகன் அஸ்வின், ஷமி, வில்ஜோன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஆன்ட்ரு டை ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

177 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கியது பஞ்சாப் அணி.

கிறிஸ் கெய்ல் வழக்கம்போல பந்துகளை அடித்து நொறுக்கினார். அவர் வந்த வேகத்தில் 4 சிக்சர்கள், 3 பவுண்டர்களுடன் 40 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மயங்க் அகர்வால் பொறுப்புடன் ஆடினார். மறுமுனையில் கேஎல் ராகுல் நிதானமாக ஆடினார். இருவரும் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டதோடு, ரன்களையும் சேர்த்தனர். 21 பந்துகளில் 43 ரன்கள் அடித்த மயங்க் அகர்வால், குருணால் பாண்ட்யா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து மில்லர் வந்தார். அதுவரை நிதானம் காட்டிய கேஎல் ராகுல் அதிரடி காட்ட ஆரம்பித்தார். அவர் 57 பந்துகளில் 71 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் நின்றார். டேவிட் மில்லர் வெற்றிக்கான ரன்னை எடுத்தார். அவர் 11 பந்துகளில் 16 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

18.4 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 177 ரன்கள் எடுத்தது பஞ்சாப். 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அந்த அணி மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது.

மும்பை அணி தரப்பில் குருணால் பாண்டியா இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். மலிங்கா, பும்ரா என உலகத் தரமான பந்துவீச்சாளர்கள் இருந்தும் பஞ்சாப் அணியை ஒன்றும் செய்ய முடியவில்லை.

இன்றைய மற்றொரு ஆட்டம் டெல்லி கேப்பிடல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே டெல்லியில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சைத் தேர்வு செய்துள்ளது.

– வணக்கம் இந்தியா

From around the web