ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் அமீரகத்தில் நடத்தப்படும்! ஐ.பி.எல். சேர்மன் அறிவிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியதாலும், நாடு முழுவதும் தொடர் ஊரடங்கு விதிக்கப்பட்டதாலும் ஐ.பி.எல். போட்கள் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. ஐ.பி.எல். போட்டியை நடைபெறாததால் ரூ.4 ஆயிரம் கோடி வருமானம் இழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டுக்குள் ஏதுவான காலஇடைவெளியில் ஐபிஎல் போட்டிகளை நடத்திட இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருந்தது. இந்தப் போட்டியில் இந்திய வீரர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு வீரர்களும் கலந்து கொள்வதால் 20 ஓவர் கிரிக்கெட்டிற்கு ரசிகர்களிடையே பலத்த வரவேற்பு எப்போதும் உண்டு.
 

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் அமீரகத்தில் நடத்தப்படும்! ஐ.பி.எல். சேர்மன்  அறிவிப்பு!ந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியதாலும், நாடு முழுவதும் தொடர் ஊரடங்கு விதிக்கப்பட்டதாலும் ஐ.பி.எல். போட்கள் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. ஐ.பி.எல். போட்டியை நடைபெறாததால் ரூ.4 ஆயிரம் கோடி வருமானம் இழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்த ஆண்டுக்குள் ஏதுவான காலஇடைவெளியில் ஐபிஎல் போட்டிகளை நடத்திட இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருந்தது. இந்தப் போட்டியில் இந்திய வீரர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு வீரர்களும் கலந்து கொள்வதால் 20 ஓவர் கிரிக்கெட்டிற்கு ரசிகர்களிடையே பலத்த வரவேற்பு எப்போதும் உண்டு.

தற்போதைய சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் உட்பட 8 அணிகள் பங்கேற்கும் 13வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் மார்ச் 29ம் தேதி தொடங்கி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

தற்போது இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்த முறை ஐ.பி.எல். போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் இந்த போட்டி நடத்தப்பட இருக்கிறது. ஐ.பி.எல். போட்டிகள் செப்டம்பர் 26 முதல் நவம்பர் 7வரை நடைபெறலாம் என கூறப்பட்டுள்ளது.

‘13-வது ஐ.பி.எல். போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததும் தேதி இறுதி செய்யப்படும் என ஐ.பி.எல். சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார்.

A1TamilNews.com

From around the web