ப்ளே ஆஃப் வாய்ப்பு அம்போ… போராடித் தோற்றது கிங்ஸ் லெவன் பஞ்சாப்!

மும்பை: ஐபிஎல் தொடரின் 50-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. ப்ளே ஆஃப் சுற்றுக்கான தகுதியைத் தீர்மானிக்கும் போட்டி என்பதால் மிகுந்த முக்கியத்துவம் பெற்றது. டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது.
 

ப்ளே ஆஃப் வாய்ப்பு அம்போ… போராடித் தோற்றது கிங்ஸ் லெவன் பஞ்சாப்!

மும்பை: ஐபிஎல் தொடரின் 50-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.

ப்ளே ஆஃப் சுற்றுக்கான தகுதியைத் தீர்மானிக்கும் போட்டி என்பதால் மிகுந்த முக்கியத்துவம் பெற்றது. டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது. க்ருணால் பாண்டியா 23 பந்தில் 32 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பொல்லார்டு 23 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 50 ரன்கள் எடுத்தார்.

பஞ்சாப் அணியின் ஆன்ட்ரூ டை 4 விக்கெட் வீழ்த்தினார். இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 187 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ். அதைத்தொடர்ந்து பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது.

பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் லோகேஷ் ராகுல், கிறிஸ் கெயில் இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். 4-வது ஓவரில் கிறிஸ் கெயில் 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் ஆரோன் பிஞ்ச் களமிறங்கினார். அவர் ராகுலுடன் இணைந்து சீராக விளையாடி ரன் சேர்த்தார். சிறப்பாக விளையாடிய ராகுல் 36 பந்தில் அரைசதம் அடித்தார். பிஞ்ச் 35 பந்தில் 46 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார்.

பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 3 ஓவரில் 38 ரன்கள் தேவைப்பட்ட போது பந்தில் 94 ரன்கள் எடுத்திருந்த ராகுல் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். யுவராஜ் சிங் களமிறங்கினார். கடைசி ஓவரில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் யுவராஜ் சிங் சொதப்பி, அவுட்டாகிவிட, 182 ரன்கள் மட்டுமே பஞ்சாபால் சேர்க்க முடிந்தது.

கடைசி ஓவரை மிச்செல் மெக்லினெகன் வீசினார். இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. மும்பை அணி பந்துவீச்சில் பும்ரா 3 விக்கெட்களும், மிச்செல் மெக்லினெகன் 2 விக்கெட்களும் வீழ்த்தினர். இதனால் 3 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.

இதன் மூலம் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துவிட்டது பஞ்சாப் அணி.

– வணக்கம் இந்தியா

From around the web