விற்பனையில் படுஜோர்: ‘ஐபோன் X’ வியாபாரம் ஆரம்பம்…

கைபேசிகளில் மிக முன்னனி நிறுவனமான ’ஐ போன்’ தனது அடுத்த படைப்பான ‘ஐ போன் X’யை அறிமுகம் செய்துள்ளது. ‘ஐபோன் X’ விற்பனையை துவங்கிய சில நிமிடங்களில் தீர்ந்துள்ளது. நேற்று (நவம்பர் -3) மாலை 6 மணிக்கு ஐபோன் X விற்பனை துவங்கியது. ஆர்டெல் வலைத்தளத்தில் விற்பனை துவங்கிய சில நிமிடங்களில் ஐபோன் X விற்று தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டது. மீண்டும் ஸ்டாக் இருக்கும் போது விற்பனை துவங்கும் என ஏர்டெல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் ஏர்டெல் போஸ்ட்பெயிட்
 

விற்பனையில் படுஜோர்: ‘ஐபோன் X’ வியாபாரம் ஆரம்பம்…

கைபேசிகளில் மிக முன்னனி நிறுவனமான ’ஐ போன்’ தனது அடுத்த படைப்பான ‘ஐ போன் X’யை அறிமுகம் செய்துள்ளது.

‘ஐபோன் X’ விற்பனையை துவங்கிய சில நிமிடங்களில் தீர்ந்துள்ளது. நேற்று (நவம்பர் -3) மாலை 6 மணிக்கு ஐபோன் X விற்பனை துவங்கியது.

ஆர்டெல் வலைத்தளத்தில் விற்பனை துவங்கிய சில நிமிடங்களில் ஐபோன் X விற்று தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டது. மீண்டும் ஸ்டாக் இருக்கும் போது விற்பனை துவங்கும் என ஏர்டெல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் ஏர்டெல் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு அன்லாக் செய்யப்பட்ட சாதனமாக வழங்கப்படுவதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது. மேலும் ஸ்டாக் இருக்கும் வரை முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது. இத்துடன் ஏர்டெல் வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே புதிய ஐபோன்கள் இலவசமாக விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வகையான ஐபோன்கள் இந்தியாவில் 64ஜிபி மாடல் ரூ.89,000 என்றும் 256 ஜிபி மாடல் ரூ.1,02,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு வாங்கும் போது ரூ.10,000 வரை கேஷ்பேக் வழங்கப்படுவதாக அறிவித்திருந்தது.

இந்த ஏர்டெல் தளத்தில் ஐபோன் X வாங்குவோர் அனைத்து வங்கிகளின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு, இண்டர்நெட் பேங்கிங், ஏர்டெல் பேங் மற்றும் இதர தளங்களை பயன்படுத்தி பணம் செலுத்த முடியும். ஏர்டெல் ஆன்லைன் ஸ்டோர் சேவை தற்சமயம் இந்தியா முழுக்க 21 நகரங்களில் வழங்கப்படுகிறது.

ஐபோன் X ஸ்மார்ட்போனில் 5.8 இன்ச், 2436×1125 பிக்சல் OLED சூப்பர் ரெட்டினா டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே எச்.டி.ஆர்.10 மற்றும் டால்பி விஷன் சப்போர்ட் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோம் பட்டன் நீக்கப்பட்டுள்ள ஐபோன் X ஸ்மார்ட்போன் ஃபேஸ் ஐடி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அன்லாக் செய்யக் கூடிய வசதியை வழங்குகிறது.

’ஐபோன் X’ போனின் சில பெஸிலிட்டிகள்:

வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ள இந்த போனில் 12 எம்பி பிரைமரி டூயல் கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டூயல் OIS வசதியும், ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி வசதியும் வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் 7 மாடலை விட இரண்டு மணி நேரம் கூடுதல் பேட்டரி பேக்கப் வழங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

From around the web