நவம்பர் 19 உலக ஆண்கள் தினம்!

நவம்பர் 19ம் தேதி உலகின் 80 நாடுகளில் உலக ஆண்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ட்ரினிடாட், டோபோகோ நாடுகளில் 1991ம் ஆண்டு உருவான ஆண்கள் தின கொண்டாட்டத் திட்டம் தற்போது ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆண்கள் மற்றும் இளைஞர்களின் உடல்நலம், ஆண், பெண் இன உறவை மேம்படுத்துதல், ஆண், பெண் இன சமத்துவம், ஆண்களுக்கு எதிரான பாரபட்சம், முன்மாதிரி ஆண்களை ஊக்குவித்தல் என முக்கிய அம்சங்களுடன் ஆண்கள் தினம் உருவாக்கப்பட்டது. இளைஞர்கள் மற்றும் ஆண்களின்
 

நவம்பர் 19 உலக ஆண்கள் தினம்!வம்பர் 19ம் தேதி உலகின் 80 நாடுகளில் உலக ஆண்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ட்ரினிடாட், டோபோகோ நாடுகளில் 1991ம் ஆண்டு உருவான ஆண்கள் தின கொண்டாட்டத் திட்டம் தற்போது ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19ம் தேதி கொண்டாடப்படுகிறது.

ஆண்கள் மற்றும் இளைஞர்களின் உடல்நலம், ஆண், பெண் இன உறவை மேம்படுத்துதல், ஆண், பெண் இன சமத்துவம், ஆண்களுக்கு எதிரான பாரபட்சம்,  முன்மாதிரி ஆண்களை ஊக்குவித்தல் என முக்கிய அம்சங்களுடன் ஆண்கள் தினம் உருவாக்கப்பட்டது.

இளைஞர்கள் மற்றும் ஆண்களின் சாதனைகள் மற்றும் திருமணம், குழந்தைகள் வளர்ப்பு, குடும்பம், சமூகப் பங்களிப்புகளுக்கான கொண்டாட்ட நாளாக ஆண்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது. மனிதநேயத்தை வளர்ப்பது தான் இதற்கான அடிப்படை நோக்கமாகவும் அமைந்துள்ளது.

தாத்தாவாக, தந்தையாக, மகனாக, கணவனாக, அண்ணனாக, தம்பியாக, நாட்டிற்கு தொண்டாற்றும் படைவீரர்கள், காவலர்கள்,  ஊழியர்கள் என மனித இனத்திற்கு தொண்டாற்றும் ஆண்கள் மற்றும் இளைஞர்களுக்கு இனிய ஆண்கள் தின வாழ்த்துகள்.

https://A1TamilNews.com 

From around the web